நீல்கிரி குருமா
தேவையான பொருட்கள்:
========================
கொத்தமல்லி - அரை கப்
புதினா இலைகள் - அரை கப்
பச்சை மிளகாய் - நான்கு
கசகசா - ஒரு டேபிள்ஸ்பூன்
துருவிய தேங்காய் - ஒரு கப்
நருக்கிய பெரிய வெங்காயம் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
இஞ்சிபூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
தனியா தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - ஒன்றரை குழிகரண்டி
விரும்பிய காய்கறிகள் - இரண்டு கப் (பீன்ஸ்,கேரட்,காலிப்ளவர்,உருளை,வாழை,முள்ளங்கி)
சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன்
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - ஒன்று
ஏலக்காய் - ஒன்று
பிரிஞ்சி இலை - ஒன்று
செய்முறை:
===========
* காய்கறிகளை நீளமான (அவியலுக்கு நறுக்குவது போல்) துண்டுகளாக நறுக்கவும்.
* ஒரு கடாயில் மூன்று டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து பொரிந்ததும் நருக்கிய காய்கறிகளை சேர்த்து உப்பு சேர்த்து வதக்கவும்.
* கை விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
* சரியாக மூன்று நிமிடம் வதக்கி அடுப்பை அணைத்து விடவும்.
* கொத்தமல்லி,புதினா இலைகள்,பச்சை மிளகாய் மூன்றையும் சிறிது நீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
* கசகசாவை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுக்கவும்.
* துருவிய தேங்காயுடன் வறுத்த கசகசாவை சேர்த்து விழுதாக அரைக்கவும்.
* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை,கிராம்பு,ஏலக்காய்,பிரிஞ்சி இலை சேர்த்து பொரிய விடவும்.
* பொரிந்ததும் நருக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் உப்பு,பெருங்காயம்,இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
* மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து வதக்கவும்.
* நல்லா வதங்கி பச்சை வாசனை போனதும் மிளகாய் தூள்,தனியா தூள் சேர்த்து ஒன்று சேருமாறு கிளறவும்.
* ஒன்று சேர்ந்ததும் புதினா மசாலா சேர்த்து எண்ணெய் கக்கும் வரை வதக்கவும்.
* வதக்கிய காய் கறிகளை சேர்க்கவும்.
* விரும்பினால் கால் டம்பளர் நீர் விட்டு கொத்தி வந்ததும் இறக்கவும்.
* சுவையான நீல்கிரி குருமா தயார்.
இதனை சாத்துடன் பிசிந்து சாப்பிட நன்றாக இருக்கும்.
சப்பாத்தி,நான்,பராத்தாக்களுக்கும் சுவையாக இருக்கும்.
எல்லா வைகயான கலவை சாதங்களுடனும் பரிமாறலாம்.
விருப்பப்பட்டால் இந்த குருமாவை பரிமாரும்னும் ஒரு கப் பன்னீர்
துண்டுகளை சேர்க்கலாம்.
இதை பற்றிய உங்க கருத்துக்களை சொல்லுங்க.







