Sunday, May 17, 2009

ஈசி குவிக் வெஜ் பிரியாணி1

தேவையான பொருட்கள்:
==========================
பட்டை - ஒன்று
கிராம்பு - ஐந்து
ஏலைக்காய்- ஒன்று
பிரியாணி இலை - ஒன்று
மராட்டி மொக்கு - ஒன்று
சோம்பு - கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் - ஐந்து
மிளகாய் வற்றல் - ஒன்று
தயிர் - ஒரு கப்
மிளகாய் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகு - மூன்று(வாசனைக்கு மட்டும் தான்)
லெமன் - அரை மூடி
சீரகம் - ஒரு டீஸ்பூன்
தக்காளி -1
காய்கறிக்கலவை - ஒரு கப்+ அரை கப் (உருளை,பீன்ஸ்,காரட்,முள்ளங்கி,காலிப்ளவர்,பச்சை பட்டாணி)
உப்பு - தேவையான அளவு
நெய் - இரண்டு மேசைக்கரண்டி
எண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்
அரிசி - 1(1/2) கப்
மல்லி இலை - அலங்கரிக்க

செய்முறை:
==========
  • எண்ணெய் மற்றும் நெய்யை பாத்திரத்தில் ஊற்றி காயிந்த்ததும் பட்டை,கிராம்பு,ஏலைக்காய்,பிரியாணி இலை,சோம்பு,மிளகு,சீரகம்,மராட்டி மொக்கு எல்லாத்தையும் சேர்த்து பொறிய விடனும்.
  • மிளகாய் வற்றலும் பச்சை மிளகாயும் சேர்த்து வதக்கி காய் கறிகளை போட்டு வதக்கணும்.
  • அரிசி,தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கணும்
  • தயிர் சேர்த்து பாதி அளவு மிளகாய் தூள் சேர்த்து நான்கு டம்ளர் நீர் விட்டு கிளறி உப்பு போட்டு வேக விடனும்.
  • சாதம் நன்கு வெந்ததும் மீதம் உள்ள மிளகாய் தூள் தூவி கிளறி மல்லி இலை தூவி லெமன் பிழிந்து இறக்கவும்.

குறிப்பு:

*ரைஸ் குக்கரில் சமைப்பவர்கள் இதே முறைப்படி செய்து தண்ணீர் சேர்த்தவுடன் ரைஸ் குக்கருக்கு மாற்றி சமைக்கவும்.
*தம் பிரியாணி செய்பவர்கள் இதே போல் செய்து நீர் சேர்த்து அரிசி மற்றும் காய்கறி பாதி அளவு வெந்ததும் தம போடலாம்.
*மைக்ரோவேவ் ஓவனில் செய்பவர்கள் நீர் சேர்த்து கலவையை மைக்ரோவேவ் பாத்திரத்திற்கு மாற்றி இருபத்துமூன்று நிமிடம் அல்லது உங்கள் ஒவேன்னிர்க்கு தகுந்த்தார்ப்போல் நேரம் கூட குறைய வைத்து எடுக்கவும்.
*நார்மல் குக்கரிலும் இதே போல் செய்யலாம்.

No comments:

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?