Thursday, May 28, 2009

கற்கண்டு சாதம் - 2

தேவையான பொருட்கள்:
கற்கண்டு - அரை கப்
சர்க்கரை - அரை கப்
அரிசி - ஒரு டம்ளர்
பால் - ஏழு டம்ளர்
நெய் - பத்து மேசைக்கரண்டி
சாப்ரான்(குங்குமப்பூ) - மூன்று பின்ச்
வெள்ளை கலர் - ஒரு பின்ச்(தேவைப்பட்டால்)
முந்திரி - மூன்று
பாதாம் - மூன்று
திராட்சை - ஐந்து
பிஸ்தா- ஒரு தேக்கரண்டி
சிறிய கற்கண்டு - ஒரு தேக்கரண்டி(தேவைப்பட்டால்)
செய்முறை:
*அரிசியை நன்றாக களைந்து ஏழு டம்ளர் பால் விட்டு வற்றும் வரை வேக விடவும்.
*வற்றியதும் அரை கப் கற்கண்டையும் ,சர்க்கரையையும் போட்டு நன்கு கிளறவும்.
*கற்கண்டும்,சர்க்கரையும் கரைந்து சாதத்துடன்ஒன்று சேர்ந்ததும் ஐந்து மேசைக்கரண்டி நெய் விட்டு நன்கு கிளறவும்.
*அல்வா பதத்திற்கு நன்றாக சுருண்டு வந்ததும் சாப்ரான் மற்றும் கலர் தூவி கிளறனும்.
*அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளர வேண்டும்.
*அடுப்பை அனைத்து விட்டு வேறு ஒரு பாத்திரத்தில் மீதமுள்ள நெய் விட்டு முந்திரி,பாதாம்,பிஸ்தா,திராட்சை வறுத்து கொட்டவும்.
*சிறிய கற்கண்டுகளை போட்டு கலக்கவும்.

No comments:

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?