Sunday, May 3, 2009

பிந்தி மசாலா

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் - அரை கிலோ
தக்காளி - நூறு கிராம்
வெங்காயம் - நூறு கிராம்
பச்சை மிளகாய் - 1
தனியா பொடி- 3 ஸ்பூன்
மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
மிளகாய் பேஸ்ட் - 1 ஸ்பூன்
பூண்டு - 1
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தே.அளவு
நெய் - 1 ஸ்பூன்
ஆயில் - 2 ஸ்பூன்
மல்லி இலை - அலங்கரிக்க

செய்முறை:
============

1)வெண்டைக்காய்யை கொஞ்சம் பெருசா கட் பண்ணனும்.

2)கடாயில் ஆயில் விட்டு காய்ந்ததும் பூண்டு மற்றும் கறிவேப்பிலை போட்டு பொரிந்ததும் பொடியாக கட் பண்ணின வெங்காயம் போட்டு சிவந்ததும் பச்சை மிளகாய் போடணும்.

3)லேசா வதங்கினதும் தக்காளி போட்டு நன்கு குழையும் வரை வதக்கணும்.

4)பின்பு நறுக்கிய வெண்டைக்காய் போட்டு தே.உப்பு போட்டு இரண்டு நிமிடம் வதக்கணும்.

5)பின்பு மூன்று மசாலாவையும் சிறிது நீரில் கட்டியில்லாமல் கரைத்து வதக்கலில் விட்டு மேலும் சிறிது நீர் விட்டு 8 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

6)மல்லி இலை தூவ வேண்டும்.

7)நெய் விட்டு பரிமாற வேண்டும்.

அளவு - 2 பேர்.


No comments:

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?