Wednesday, May 6, 2009

போஹா கீர்

தேவையான பொருள்கள்:

பால் - 1 லிட்டர்
அவல் - 1/4 கப்
சர்க்கரை - 1 கப்
ஏலைக்காய்பொடி - 1 டீஸ்பூன்.
முந்திரி - 7
திராட்சை - 8

செய்முறை:

1)அவலை நன்றாக அலசி பிழிந்து 5 நிமிடம் உலர வைத்து நெய்விட்டு வறுத்துக் கொள்ளவும்.

2)பாலை நன்றாக காய்ச்சி கொதி வரும் பொழுது வருத்த அவலை சேர்த்து பிளேமை (flame) சிம்மில் வைத்து கொதிக்கவிடவும்.

3)பால் பாதியாக சுண்டியவுடன் அடுப்பிலிருந்து இறக்கி சர்க்கரை,ஏலைக்காய்,முந்திரி,திராட்சை எல்லாம் சேர்க்கணும்.

4)பாதாம் இருந்தால் கடைசியாக 3 பாதாமை வறுத்து பொடிபண்ணி தூவலாம்.

5)இதனை சூடாக சாப்பிட்டால் தான் ருசி அதிகம் இருக்கும்.

இது ஆந்திராவில் விசேஷ நாள்களில் செய்யும் சிறப்பு பண்டம்.


அளவு - 2 பேர்.

1 comment:

keetha said...

hai ammu,

nan geetha.soopera iruku un recipe.enga veetuku nethu en sonthakaravunga vanturuntanga.pohaa gheer then senju kuduthen.romba nalla irukunu sonanga ellarum.enaku micham ilaina pathukoyen.:-(

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?