Tuesday, May 12, 2009

ரசப்பொடி இல்லாத ரசம்.

தேவையான பொருள்கள்:

புளி - கெட்டியாக கரைத்தது ஒரு சிறிய டம்ளர்
துவரம் பருப்பு - 1(1/2) கப்
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
மல்லி இலை - ஒரு கைப்புடி
கறிவேப்பிலை - 1/2 கைப்புடி
உப்பு - தேவையான அளவு
நெய் - தாளிப்பதற்கு

செய்முறை:
  • முதலில் துவரம் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் சிறிது உப்பு,மஞ்சள் தூள்,பச்சை மிளகாய்,தக்காளி,சிறிது மல்லி இலை சேர்த்து நன்கு குழைய வேகவிடனும்.
  • வெந்ததும் அதை மிக்சரில் ஸ்மூத்தா அரைத்து எடுத்துக்கணும்.
  • ஒரு பாத்திரத்தில் சிறிது ஆயில் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை,சீரகம்,மிளகு தாளித்து புளிக்கலவையை விட்டு கொதிக்க விடனும்.
  • பச்சை வாசனை போக ஆரமித்ததும் அரைத்த பருப்புக்கலவையை போட்டு,மூன்று பொடிகளும் சேர்த்து இரண்டு டம்ளர் அல்லது தேவையான அளவு நீர் விட்டு ஒரு கலக்கு கலக்கி அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விடனும்.
  • நுரைத்ததும் இறக்கி மல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.
அளவு - 2 பேர்.

No comments:

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?