Friday, May 15, 2009

புதினா தொகையல்

தேவையான பொருட்கள்:


புதினா - ஒரு கட்டு
கொத்தமல்லி - ஒரு கைப்புடி
தாளிக்கும் கடலை பருப்பு - ஒரு கப்
உளுத்தம்பருப்பு - கால் கப்
மிளகாய் வற்றல் - 8
பச்சை மிளகாய் - 3
பெரிய வெங்காயம் - 1/2
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
பெருங்காயம் - அரை ஸ்பூன்
நெய் - இரண்டு துளி


செய்முறை:
  • கடையில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் பெருங்காயம் போட்டு பொறிந்ததும் கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு போட்டு வறுக்கணும்.
  • சிவந்ததும் மிளகாய் வற்றல் போட்டு வதக்கணும்.
  • பின்பு பச்சை மிளகாய் போட்டு வதக்கணும்.
  • வெங்காயம் போட்டு லேசாக வதங்கியதும் புதினா மற்றும் கொத்தமல்லி போட்டு நன்றாக வதக்கணும்.
  • வதங்கியதும் புளி போட்டு ஒரு முறை பிரட்டி விட்டு தனலை அணைத்துவிடவும்.
  • நன்றாக ஆறியதும் உப்பு சேர்த்து சிறிது சிறிதாக நீர் விட்டு மை போல் அரைத்து எடுக்கவும்.
  • ஒரு வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை தாளித்து அரைத்த கலவையில் கொட்டவும்.
  • சர்க்கரை சேர்த்து கிளறி பின்பு பரிமாறவும்.
அளவு:2


சூடான சாதத்துடன் சிறிது நெய் விட்டு இந்த தொகையலை போட்டு பிசிந்து சாப்பிட சுவை நன்றாக இருக்கும் அல்லது இட்லி , தோசை,எல்லா வகையான வெரைட்டி ரைஸ் கூட சைட் டிஷ்ஷாக சாப்பிடலாம்.

No comments:

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?