Saturday, May 16, 2009

அவல் உப்புமா

தேவையான பொருள்கள்:

அவல் - ஒரு கப்
சின்ன அல்லது பெரிய வெங்காயம் - ஒரு கப்
தேங்காய் துருவல் - அரை கப்
தக்காளி - 1
பச்சை மிளகாய் -5
மிளகாய் வற்றல் - 3
கடலை பருப்பு பொடி - 3 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு பொடி - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - தாளிப்பதற்கு
சில்லி சாஸ் - 1 தேக்கரண்டி
டொமேடோ கெட்ச்சப் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - அரை குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
  • அவலை 10 நிமிடம் அல்லது 5 நிமிடம் ஊற வைக்கணும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு காயிந்ததும் கடுகு,சீரகம் போடு வெடிக்க விடனும்.
  • மிளகாய் வற்றல்,பச்சை மிளகாய் போட்டு வதக்கி வெங்காயம் போட்டு நன்கு வதக்கணும்.
  • சிவந்ததும் தக்காளி போட்டு கரையும் வரை வதக்கணும்.
  • சிறிது உப்பு சேர்த்து இரண்டு பொடிகளையும் சேர்த்து வதக்கி கருகுவதர்க்குள் சில்லி சாஸ் விட்டு வதக்கி டோமடோ கெட்ச்சப் சேர்த்து வதக்கி அவலை நன்கு பிழிந்து சேர்க்கவும்.
  • அவல் அடுப்பில் இருக்கும் கலவையுடன் நன்கு சேருமாறு பிரட்டி விட்டு ஒரு நிமிடம் வேக விடனும்.
  • வெந்ததும் அடுப்பை அணைத்து விட்டு தேங்காய் துருவல் தூவணும்.
அளவு-2 பேர்

குறிப்பு:

அவலை அதிக நேரம் ஊற வைத்து விடக்கூடாது.அப்படி ஊறி விட்டால் அதை வைத்து உப்புமா செய்யக்கூடாது,நன்றாக வராது..மாறாக எனது குறிப்பில் உள்ள அவல் வடை செய்து பார்க்கவும்.சாஸ் வாசனை பிடிக்காதவர்கள் சாஸ் சேர்க்காமலும் இதே முறைப்படி செய்யலாம்.கடலைபருப்பு பொடி,உளுத்தம் பருப்பு பொடி இரண்டும் ரெடிமேட்டாக கிடைக்கிறது.அப்படி இல்லாவிட்டால் தேவையான அளவு கடலை பருப்பு எடுத்துக்கொண்டு காரத்திற்கு தகுந்தார்ப்போல் மிளகாய் வற்றல் சேர்த்து சிவக்கும் வரை வெறும் வாணலியில் வறுத்து பொடிக்கவும்.இதே போல் உளுத்தம் பருப்புவிலும் செய்யலாம்.

No comments:

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?