Sunday, May 17, 2009

வெந்தயக் குழம்பு

தேவையான பொருட்கள்:

வெந்தயம் - மூன்று டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல் - ஐந்து
பச்சை மிளகாய் - ஒன்று
பெருங்காயம் - மூன்று சிட்டிகை
பெரிய வெங்காயம் - ஒன்று
தாளிக்கும் கடலை பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
கடுகு - தாளிப்பதற்கு
புளி - பெரிய எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
  • புளியை மூன்று டம்ளர் சுடு நீரில் ஊற வைத்து கரைத்துக்கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி காயிந்ததும் கடுகு போட்டு பொறிந்ததும் கடலை பருப்பு சேர்க்கணும்.
  • கடலை பருப்பு சிவந்ததும் பெருங்காயத்தை பொரிய விடனும்.
  • வெந்தயம் சேர்த்து லேசாக வதக்கணும்.
  • வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி மிளகாய் வற்றல் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கரைத்து வைத்துள்ள புளியை சேர்க்கணும்.
  • உப்பு சேர்த்து கொதிக்க விடனும்.
  • நன்றாக கொதித்து எண்ணெய் குழம்பின் மேல் தெரிந்தவுடன் இறக்கவும்.
குறிப்பு:

*பெரிய வெங்காயத்திற்கு பதிலாக சின்ன வெங்காயம் அல்லது முருங்கைக்காய் சேர்த்தும் செய்யலாம்.
*வெந்தயத்தை கருகாமல் கவனமாக வதக்க வேண்டும் இல்லாவிட்டால் ருசி மாறி விடும்.
*இந்த குறிப்பிட்ட குழம்பிற்கு கீரை மசியல் மிக நன்றாக இருக்கும்.
*இந்த குழம்பிற்கு பொடிகள் எதுவும் சேர்க்க கூடாது.

No comments:

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?