Wednesday, May 27, 2009

திருநெல்வேலி ரவா கிச்சடி

தேவையான பொருட்கள்:
ரவை - ஒரு கப்
பட்டை - 1
கிராம்பு - இரண்டு
பிரியாணி இலை - ஒன்று
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - மூன்று
பச்சை மிளகாய் - நான்கு
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
நெய் (அல்லது) வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - பத்து இலை
கொத்தமல்லி - சிறிது
முந்திரி பருப்பு - சிறிது
கடுகு - தாளிப்பதற்கு
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
தக்காளி - அரை கப்
வெங்காயம் - அரை கப்

செய்முறை:
  • ரவையை வாசனை வரும் வரை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
  • கிச்சடி செய்ய வேண்டிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய்,நெய் விட்டு காய்ந்ததும் கடுகு,சீரகம் போட்டு வெடிக்க விடனும்.
  • பட்டை,கிராம்பு,பிரியாணி இலை சேர்த்து பொரிக்கணும்.
  • கடலை பருப்பு போட்டு சிவக்க வறுக்கவும்.
  • பெருங்காயம் போட்டு பொரிந்ததும் மிளகாய் வற்றல்,பச்சை மிளகாய் போட்டு வறுத்து வெங்காயம் போடணும்.
  • வதங்கியதும் தக்காளி போட்டு வதக்கி உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கணும்.
  • ஒரு கப் ரவைக்கு இரண்டு கப் நீர் தேவைப்படும்.
  • தக்காளி வதங்கியதும் நீர் விட்டு கொதிக்க விடனும்.
  • தண்ணீர் கொதிக்க ஆரமித்ததும் ரவை சேர்த்து கிளர வேண்டும்.
  • உதிரி உதிரியாக ஆனதும் இறக்கவும்.(மூன்று நிமிடம் சிம்மில் வேக விட்டால் சரியான பதம் கிடைக்கும்).
  • வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி,கறிவேப்பிலை வறுத்து கிச்சடியில் கொட்டி கிளறவும்.
  • மல்லி இலை தூவி பரிமாறனும்.
குறிப்பு:
இது பொதுவாக திருநெல்வேலி திருமணங்களில் கலை உணவாக கொடுப்பார்கள்.பட்டை,கிராம்பு இல்லாமல் செய்தால் சரியான சுவை கிடைக்காது.

No comments:

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?