Friday, May 29, 2009

ஸ்பெஷல் ஸ்பைசி & ஹெல்த்தி சாதம்

தேவையான பொருள்கள்:
குழைத்து வடித்த சாதம் - மூன்று கப்
கடுகு - கால் டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல் - மூன்று
பெருங்காயம் - இரண்டு பின்ச்
பச்சை மிளகாய் - ஐந்து
கருப்பு திராட்சை - கால் கப்
கடலை பருப்பு - கால் டீஸ்பூன்
இஞ்சி - ஒரு அங்குல துண்டு
தயிர் - இரண்டு கப்
கறிவேப்பிலை-ஒரு கொத்து
கொத்தமல்லி - ஒரு பிடி
கீரை(அல்லது)புதினா - கால் பிடி
உப்பு - தேவையான அளவு.
லெமன் ஜூஸ் - ஒரு டிராப்
மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
*சாதத்தை நன்றாக குழைவாக வடித்து தயிர் மற்றும் உப்பு சேர்த்துஅழுத்தி பிசைந்து கொள்ளவும்.
*ஒரு பச்சை மிளகாய் தவிர மற்ற அனைத்து பச்சை மிளகாயையும் நன்கு பொடியாக கட் பணிக்கணும்.
*ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காயிந்ததும் கடுகு போட்டு வெடிக்கவிடவும்.
*கடலை பருப்பு,பெருங்காயம் போட்டு பொரிந்ததும் நறுக்கிய பச்சை மிளகாய்,மிளகாய் வற்றல் போட்டு வறுத்து இஞ்சி போட்டு வதக்கணும்.
*வதக்கிய வற்றையும் திராட்சையையும் கலந்து வைத்துள்ள சாதத்தில் கொட்டி கிளறவும்.
*கறிவேப்பிலை,கொத்தமல்லி மற்றும் வைத்துள்ள மிளகாயை மிக்சியில் அரைத்து எடுக்கவும்.
*ஒரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் ஆயில் விட்டு காய்ந்ததும் அரைத்தவற்றை போட்டு கிளறி பச்சை வாடை போனதும் எடுத்து கலந்து வைத்துள்ள சாதத்தில் கொட்டவும்.
*கீரையை நறுக்காமல் அதிக நீர் விட்டு வேக வைத்து எடுக்கவும்.
சிறிது உப்பு சேர்த்து கலந்து ஒரு டிராப் லெமன் பிழிந்து மிக்ஸ் பண்ணி கலந்து வைத்துள்ள சாதத்தில் கொட்டவும்.
*மிளகை மிக்சியில் ஒன்றும் பாதியுமாக பொடித்து கலந்து வைத்துள்ள சாதத்தில் கொட்டி கலக்கவும்.
*சாதம் தயார்.

குறிப்பு:
திராட்சையை கட் பண்ணக்கூடாது.முளுவதுமாகத்தான் போட வேண்டும்.முழு மிளகுக்கு பதில் ரெடிமேட் மிளகு பொடி போடக்கூடாது.

No comments:

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?