Monday, May 4, 2009

பைங்கன் கா பர்தா

தேவையான பொருட்கள்:
------------------------------------

எக் ப்ளன்ட் - 1 (அல்லது) பெரிய குண்டு கத்திரிக்காய் - 5
பச்சை மிளகாய் - 7
பெரிய வெங்காயம் - 1(1/2) கப் பொடியாக நறுக்கியது
தக்காளி - 2 கப் நறுக்கியது
பச்சை பட்டாணி - 1/2 கப்
தனியா பொடி - 3 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
மிளகாய் பொடி - 1/4 டீஸ்பூன்.
மல்லி இல்லை - ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
உப்பு - தே.அளவு

செய்முறை:
----------------

1)முதலில் எக் பிளானட் ( அல்லது) கத்திரிகாய் யில் ஆயில் தடவி அடுப்பில் போட்டு சுட்டு எடுக்கணும்.

2)ஆறியதும் மேல் தோலை உரித்து எடுத்துவிட்டு மசிச்சுக்கணும்.

3)கடாயில் ஆயில் விட்டு காய்ந்ததும் வெங்காயம் போட்டு சிவந்ததும் தக்காளி பச்சை மிளகாய் போடு வதக்கணும்.

4)தக்காளி நன்கு மசிந்ததும் பச்சை பட்டாணி மற்றும் உப்பு போட்டு 2 நிமிடம் வதக்கணும்.

5)உப்பு ஒன்று சேர்ந்ததும் நறுக்கிய கறிவேப்பிலையும் மல்லி இலையும் சேர்த்து மூன்று பொடிகளையும் சேர்த்து கிளறனும்.

6)1/2 டம்ளர் நீர் விட்டு கொதிக்க விடனும்.

7)மசாலா சேர்ந்ததும் மசித்த கத்தரிக்காயை போடு கிளறனும்.

8)பரிமாறும் முன்பு நெய் சேர்த்து பரிமாறணும்.

அளவு - 2 பேர்.

குறிப்பு:இதை சாதத்துடன் சாப்பிட சுவை மிகவும் நன்றாக இருக்கும்.

No comments:

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?