Friday, May 15, 2009

முருங்கைக்கீரை பொரியல்

தேவையான பொருட்கள்:

முருங்கைக்கீரை - ஒரு கட்டு
தேங்காய் துருவல் - ஒரு கப்
பச்சை மிளகாய் - ஆறு
வேர்க்கடலை - கால் கப்
மிளகு- ஒரு டேபிள்ஸ்பூன்
ஜீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
புதினா மற்றும் மல்லி இலை - ஒரு கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
தாளிப்பதற்கு:
கடுகு
உளுத்தம்பருப்பு
கடலை பருப்பு
மிளகாய் வற்றல்
பெருங்காயம்

செய்முறை:
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • கீரையை பொடியாக நறுக்கி நன்கு அலசவும்.
  • மிளகு மற்றும் சீரகத்தை ஒன்றும் பாதியுமாக பொடித்து வைத்துக்கொள்ளவும்.
  • நறுக்கிய கீரையை ஒரு ஐந்து நிமிடம் சுடு நீரில் போடவும்.
  • ஒரு வாணலியில் நெய் விட்டு காயிந்ததும் தாளிக்க வேண்டியவற்றை தாளித்து நிலக்கடலையும்,வெங்காயம் போட்டு நன்கு வதக்கணும்.
  • புதினா மற்றும் மல்லி இலை சேர்த்து நன்கு வதக்கி,பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கி போடவும்.
  • தேவையான உப்பு போடு நீரில் இருக்கும் கீரையை நன்கு பிழிந்து போடவும்.
  • ஒரு ஐந்து நிமிடம் சிறு தீயில் வதக்கணும்.
  • தேவையான உப்பு போட்டு பொடித்த பொடியையும் போட்டு அடுப்பை அணைக்கவும்.
குறிப்பு:

கீரை ரொம்ப வெந்து விட கூடாது.3/4 th குக் ஆகி இருந்தால் போதுமானது.இதை மோர்க்குழம்பு ,வெந்தயக்குழம்பு ,மிளகாய் குழம்புடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
முருங்கைக்கீரை இல்லையெனில் எந்தக் கீரையிலும் செய்யலாம் இதே செய்முறையில்.

அளவு - ஐந்து பேருக்கு

No comments:

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?