Tuesday, May 19, 2009

கற்கண்டு சாதம்

தேவையான பொருள்கள்:
=====================
அரிசி - 1/2 கப்
தூள் செய்த கற்கண்டு - ஒரு கப்
பாதாம் பருப்பு - 3
முந்திரிப் பருப்பு - 7
திராட்சை - 5
குங்குமப்பூ - ஒரு பின்ச்(optional)
ஏலைக்காய்பொடி- 1/4 டீஸ்பூன்
நெய் - 5 டேபிள்ஸ்பூன்
தேங்காய் மூடி (அல்லது)கொப்பரைத்துருவல் - 1 கப்
உப்பு - ஒரு சிட்டிகை


செய்முறை:
=============
  • அரிசியை களைந்து துணியில் உலர்த்தவும்.
  • பாதாம் பருப்பை வெந்நீரில் போட்டு தோலை உரித்து கிராம்பு மாதிரி நீளமாக கட் பண்ணிக்கணும்.
  • முந்திரியை உடைத்து வைத்துக்கொள்ளவும்.
  • வாணலியில் கொஞ்சம் நெய் விட்டு பருப்பு,திராட்சையை வறுத்துக் கொண்டு பின்பு அரிசியை லேசா வறுத்துக் கொள்ளவும்.
  • வறுத்த அரிசியை குழைவாக வடித்துக் கொள்ளவும்.
  • தேங்கையை துருவி சிறிது நெய் விட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
  • வேறு ஒரு பாத்திரத்தில் அரை கப் நீர் விட்டு,கற்கண்டு தூளைப் போட்டு சிறிது நீர் விட்டு கரைய விடனும்.
  • சாதத்தை கற்கண்டு கலவையில் போட்டு சிறிது நீர் விட்டு அடி பிடிக்காமல் கிளறவும்.
  • சாதம் கொதிக்கும் சமயம் குங்குமப்பூ ,உப்பு,ஏலப்பொடி,முந்திரி,பாதாம்,திராட்சை ,வறுத்த தேங்காய் ,மீதம் உள்ள நெய் எல்லாமும் சேர்த்து கிளறி எடுக்கவும்.
  • கற்கண்டை பாகு காய்ச்சாமல் லேசாக கரைந்ததும் சாதத்தில் போட்டும் பண்ணலாம்.

No comments:

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?