Monday, May 4, 2009

கத்தரிக்காய் சாப்ஸ்

தேவையான பொருள்கள்:
******************************

கத்திரிக்காய் - 3
முள்ளங்கி - 1/2 கப்
பச்சை மிளகாய் - 3
மிளகாய் வத்தல் - 3
கடுகு - 1 பின்ச்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
தேங்காய் துருவல் - ஒரு கப்
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
தனியா தூள் - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
***************

1)கடாயில் ஆயில் விட்டு காய்ந்ததும் கடுகு போடணும்.

2)கடுகு வெடித்ததும் உளுத்தம்பருப்பு,கடலை பருப்பு போட்டு சிவக்க விடனும்.

3)கறிவேப்பிலை போட்டு பொரிந்ததும் காய்ந்த மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் போடணும்.

4)பிறகு கத்திரிக்காய் மற்றும் முள்ளங்கி சேர்த்து 1/2 நிமிடம் வதக்கி மூன்று பொடிகளையும் போட்டு ஒரு பிரட்டு பிரட்டனும்.

5)புளியை 1 கப் நீரில் கரைத்து அடுப்பில் விடனும்.

6)உப்பு போட்டு மூடி போட்டு வேக விடனும்.

7)முள்ளங்கயும் கத்தரிக்காயும் நன்றாக வெந்ததும் புளி தண்ணீர் எல்லாம் மிக்ஸ் ஆகி வறண்டு வரும்.அப்பொழுது தேங்காய் துருவல் தூவி இறக்கணும்.

அளவு - 2 பேர்.

குறிப்பு:முள்ளங்கி இல்லாவிட்டால் வெறும் கத்தரிகாயிலும் இதே முறைப்படி செய்யலாம்.கத்தரிக்காயை கொஞ்சம் பெரிதாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.அப்பொழுதுதான் நன்றாக வரும்.

1 comment:

M.devi said...

ammu,
unga peru nandraka irukuthu.en peru devi.ithu seithen amma romba nalla irunthusunga.guest vanthapo sariyana alavu therilanga..nenga kuduthurukarthu 2 peruku sariya iruku ma.enaku 7 peruku kundunga pls.enaku thovayal recipe kudunga pa naraya.nanri.

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?