Friday, June 12, 2009

சிம்பிள் ப்ரைட் ரைஸ்(உணவகங்களில் செய்யும் முறை)

தேவையான பொருட்கள்:
=======================
வடித்த சாதம் - ஒரு கப்
காரட்,பீன்ஸ் - ஒரு கப்
குடை மிளகாய் - கால் கப்
கோஸ் - கால் கப்
சைனீஸ் சால்ட் - ஒரு சிட்டிகை(தேவைப்பட்டால்)
பச்சை மிளகாய் - ஏழு நம்பர்
வெள்ளை மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
நறுக்கிய கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
ஆலிவ் ஆயில் - ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை:
===========
  • காரட் மற்றும் பீன்ஸ்ஸை நீளமாக மெலிதாக நறுக்கிக்கொள்ளவும்.
  • பச்சை மிளகாய்யை லேசாக இடித்துக்கொள்ளவும்.
  • மிளகை ஒன்றும் பாதியுமாக பொடி செய்து கொள்ளவும்.
  • கோஸை மிக மெலிதாக நீளமாக நறுக்கி கொள்ளவும்.
  • அடுப்பில் கடாயை காய வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து காய்கறிகளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
  • பின்பு இடித்த பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் ஒரு நிமிடம் சிறு தீயில் வதக்கவும்.
  • மிளகு தூள் மற்றும் சைனீஸ் சால்ட் சேர்த்து ஒரு தரம் பிரட்டி சாதத்தில் கொட்டி கிளறவும்.
  • தேவையான அளவு உப்பு சேர்த்து நறுக்கிய கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.
  • ப்ரைட் ரைஸ் தயார்.
குறிப்பு:
----------
இதற்கு பக்க உணவாக கோபி மஞ்சுரியன்,பாலக் பன்னீர்,பன்னீர் குருமா,ஆலு பாலக்,ஆந்திரா தக்காளி தொக்கு நன்றாக இருக்கும்.

No comments:

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?