Friday, June 19, 2009

அக்காரவடிசல்

தேவையான பொருட்கள்:
==========================

அரிசி - ஒரு டேபிள்ஸ்பூன்
தண்ணீர் கலக்காத பால் - நாற்பது டேபிள்ஸ்பூன்
வெல்லம் - ஏழு டேபிள்ஸ்பூன்
நெய் - ஏழு டேபிள்ஸ்பூன்
ஏலைக்காய் பொடி- ஒரு டீஸ்பூன்
உடைத்த முந்திரி - ஒரு டீஸ்பூன்
உடைத்த பாதாம் - ஒரு டீஸ்பூன்
பிஸ்தா - ஒன்றரை டீஸ்பூன்

செய்முறை:
===========

#அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரிசி மற்றும் பால் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்..

#அடுப்பு தணலை சிம்மில் வைக்கவும்.

#பாலும்,அரிசியும் நன்றாக கொதித்து கொஞ்சம் கெட்டியானவுடன்(தக்காளி பதம்) வெல்லம் சேர்த்து கிளறவும்.

#வெல்லம்,பால்,அரிசி கலவை நன்றாக சேர்ந்ததும் சிறிது சிறிதாக நெய் ஊற்றி கிளறிக்கொண்டே இருக்கவும்.

#அடுப்பில் உள்ள கலவையில் விடுவதற்கு ஐந்து டேபிள்ஸ்பூன் நெய் மற்றும் உபயோகிக்கவும்.

#எல்லாம் சேர்ந்து கேசரி பதம் வந்ததும் ஏலைக்காய் சேர்த்து கிளறி இறக்கவும்.

#வாணலியை அடுப்பில் வைத்து மீதமுள்ள இரண்டு டேபிள்ஸ்பூன் நெய்யை விட்டு காய்ந்ததும் பருப்பு வகைகளை சேர்த்து பொரிந்ததும் இறக்கி வைத்துள்ள கலவையில் கொட்டி கிளறவும்.

#தேவைப்பட்டால் ஒரு சிட்டிகை குங்குமப்பூ சேர்க்கலாம்.(விரும்பினால் தான் அவசியம் இல்லை)

#சுவையான அக்காரவடிசல் தயார்.

1 comment:

harigayathri said...

ஹாய் அம்மு,

இதை இன்று மாலை செய்தேன்.சுவை ரொம்ப ரொம்ப சூப்பர்...உங்கள் ரெசிபியில் எல்லாம் காரமாக இருகிறதே.இன்னும் கொஞ்சம் இனிப்பு ரெசிபீஸ் குடுங்களேன்...

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?