Friday, June 19, 2009

கொண்டைகடலை சுண்டல்




தேவையான பொருட்கள்:
======================
வேக வைத்த கொண்டைக்கடலை - ஒரு கப்
துருவிய தேங்காய் - ஒரு கப்
பொடியாக நருக்கிய பச்சை மிளகாய் -ஒரு டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி - கால் கப்
உப்பு - தேவையான அளவு
லெமன் ஜுஸ் - மூன்று சொட்டு


தாளிக்க:
----------
கடுகு
கடலை பருப்பு
உளுந்தம்பருப்பு
மிளக்காய் வற்றல் - ஒன்று
எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை:
===========


*வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம்பருப்பு,கடலை பருப்பு சேர்த்து வறுக்கணும்.


*மிளகாய் வற்றல் சேர்த்து வறுத்து பச்சை மிளகாய் சேர்த்து வதக்கணும்.


*பின்பு கொண்டைக்கடலை சேர்த்து வதக்கி உப்பு மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி இறக்கணும்.


*ஆறியதும் லெமன் ஜுஸ் மற்றும் கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.

No comments:

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?