Wednesday, June 17, 2009

காலிப்ளவர் குருமா:


காலிப்ளவர் குருமா:
==================
தேவையான பொருட்கள் :
--------------------------------
காலிப்ளவர் - ஒரு கப்
உருளை
கிழங்கு - கால் கப்
பட்டாணி
- கால் கப்
வெங்காயம்
- ஒன்றரை கப்
தக்காளி
- ஒன்றரை கப்
பூண்டு - மூன்று பல்
இஞ்சி - சிறிய துண்டு
மிளகாய்
வற்றல் - ஏழு
கொத்தமல்லி
- சிறிதளவு
சீரகம்
- ஒரு டீஸ்பூன்
எண்ணெய்
- தேவையான அளவு
உப்பு
- தேவையான அளவு
செய்முறை
:
----------------
*கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பூண்டு,வெங்காயம் மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.

*வெங்காயம் வதங்கி நிறம் மாறியதும் இஞ்சி மற்றும் தக்காளி சேர்த்து வதக்கி மைய அரைத்துக் கொள்ளவும்.

*பட்டாணி,காலிப்ளவர்,உருளை மூன்றையும் வேக வைத்து கொள்ளவும்.

*ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் தாளித்து கொத்தமல்லி சேர்க்கவும்.

*
அரைத்தவற்றை சேர்த்து உப்பு சேர்த்து கட்டியாக இருந்தால் சிறிது நீர் விட்டு கிளறவும்.

*கொதிக்க ஆரமித்ததும் வேக வைத்ததை சேர்த்து கிளறி பரிமாறவும்..

*சுவையான எளிதில் தயாரிக்க கூடிய காலிப்ளவர் குருமா ரெடி.

1 comment:

mohana said...

very easy delicious recipie

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?