Friday, June 19, 2009

பிஸ்ஸா


வெஜ் பிஸ்ஸா:
--------------------------
தேவையான
பொருட்கள்:
****************************
பிஸ்ஸா பேஸ் செய்ய தேவையான பொருட்கள்: =========================================
பிரட் பிளவர் - ஒரு கப்
மைதா
- அரை கப்
ஈஸ்ட்
- ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - ஒரு சிட்டிகை
வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
ஆலிவ்
ஆயில் - ஒரு டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - பிசைய தேவையான அளவு.
பிஸ்ஸா சாஸ் செய்ய தேவையான பொருட்கள்: ==============================

தக்காளி - ஒன்று
துருவிய
இஞ்சி - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்
- ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள் - அரை டேபிள்ஸ்பூன்.
பொடியாக
நருக்கிய கறிவேப்பிலை - ஒரு டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
பிஸ்ஸா மேல் வைக்க:
=====================
நருக்கிய
வெங்காயம்,தக்காளி,
ஆலபிநோஸ்
,அன்னாசி - எல்லாம் சேர்த்து 1 cup
. மோசறேல்லா சீஸ் - முக்கால் கப்
ஆலிவ்
ஆயில் - ஒரு டீஸ்பூன்
செய்முறை
:
**************
பிஸ்ஸா பேஸ் :
===============

#
ஈஸ்ட்டை அரை கப் நீரில் கரைத்து பத்து நிமிடம் ஊற வைத்து மாவில் கொட்டி உப்பு சர்க்கரை சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைத்து மூன்று மணி நேரம் ஊற விடவும்.
பிஸ்ஸா
சாஸ்:
==============
#
தக்காளி,இஞ்சி இரண்டையும் மிக்சியில் தண்ணீர் இல்லாமல் மைய அரைத்து எடுக்கவும். #ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயம் சேர்த்து கறிவேப்பிலை தாளித்து அரைத்ததை சேர்த்து நன்கு கிளறி மிளகாய் தூள், உப்பு சேர்த்து எண்ணெய் மேலே வந்ததும் இறக்கவும்.



#
காய்களை நீளமாக வெட்டிக்கொள்ளவும்.சீஸ்சை துருவிக்கொள்ளவும்.
#ஓவனை 450 டிகிரி பாரன்ஹீட்டில் ஒரு மணி நேரம் முற்சூடு செய்து வைக்கவும்..
#ஊறியவுடன் மாவு இரண்டு பங்காக இருக்கும். அதனை நன்றாக கையால் குத்தி பிசையவும். ஆலிவ் ஆயில் ஊற்றி மாவின் எல்லா பாகங்களிலும் படுமாறு தடவவும்.




#
பிஸ்ஸா ட்ரேயில் வெண்ணெய்யை தடவவும்.






#ட்ரேயில் பொங்கி வந்த மாவை வைத்து கைகளால்
சமமாக பரத்தி விட்டு மேல பிஸ்ஸா சாஸ் தடவவும்.





#துருவிய சீஸ்சை மேலே பரப்பவும்.பிஸ்ஸா
முழுவதும் பரப்பாமல் ஓரத்தில் சிறிது இடம்
விட்டு நடுவில் மட்டும் வைக்கவும்.


#பின்பு நருக்கிய காய்கறிகளை அழகாக சீஸ்சின்
மேலே வைக்கவும்.அலங்கரித்ததும்
பிச்சாவின் மேலே அங்கங்கே சிறு சிறு
உருண்டையாக செய்த பிய்த்து வைக்க வேண்டும்.
பிஸ்ஸா
மேலே ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் ஊற்றவும்.


#முற்சூடு செய்யப்ப்பட்ட ஓவனில் 25-30 வைத்து எடுக்கவும். எடுத்ததும் உடனே பரிமாறாமல் ஒரு அட்டையில் வைத்து மதியம் வீட்டில் கழித்து சாப்பிடவும்.

குறிப்பு:
**********
**********
அலங்கரிக்க
இதில் கொடுத்துள்ள பொருட்கள் என்று இல்லை உங்கள் வீட்டில் செய்த பொரியலை கூ வைத்து அலங்கரித்து பிச்சா செய்யலாம்.


No comments:

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?