Monday, June 8, 2009

மேக்ரோனி சீஸ் அண்ட் பாயில்டு பொடேடோ

தேவையான பொருட்கள்:
மேக்ரோனி - ஒரு கப்
மோசறேல்லா சீஸ் - அரை கப்
மைதா - ஒரு டீஸ்பூன்
பால் - ஒரு கப்
சீரக பொடி- ஒரு டேபிள்ஸ்பூன்
பெரிய உருளைக்கிழங்கு - ஒன்று
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - மூன்று மேசைக்கரண்டி
வெங்காயம் - கால் கப்
தக்காளி - கால் கப்
பூண்டு - 9 பல்
பட்டை - ஒன்று
ஆலிவ் ஆயில் - ஒரு மேசைக்கரண்டி
பட்டர் - ஒரு மேசைக்கரண்டி
செய்முறை:
*மேக்ரோனியை நான்கு கப் நீரில் ஒரு சொட்டு எண்ணெய் விட்டு ஆறு நிமிடம் வேக வைத்து எடுத்து வடிகட்டிக்கொள்ளவும்.
*உருளைக்கிழங்கை தூள் சீவி பாயில் பனி எடுத்துக்கணும்.
*நன்கு வெந்ததும் ஒரு முழு உருளையை சரியாக நடுவில் வெட்டி வைக்கவும்.
*ஆலிவ் ஆயில் மற்றும் பட்டரை கடையில் விட்டு காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கி பூண்டு சேர்த்து வதக்கணும்.
*வெங்காயம் லேசாக வதங்கியதும் பட்டையை பொறித்து கலவையில் இருந்து பட்டையை தனியாக எடுத்து விடவும்.
*தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி சீஸ் சேர்த்து லேசாக உருகும் வரை கிளறனும்.
*சீஸ் உருக ஆரமித்ததும் மிளகு தூள் சேர்த்து பால் சேர்த்து கொதிக்க விடனும்.
*பால் நன்கு கொதித்து பாதி ஆனதும் மைதா மாவை போட்டு கட்டி ஆகாமல் நீர் தெளித்து இரண்டு நொடி கிளறனும்.
*மேக்ரோனி சேர்த்து உப்பு சேர்த்து வதக்கி உருளைக்கிழங்கை போட்டு இரண்டு நிமிடத்தில் இறக்கவும்.
*அடுப்பில் இருந்து இறக்கி கடைசியில் சீரக பொடி சேர்த்து கிளறவும்.

குறிப்பு:
ஹோல் மில்க் உபயோகப்படுத்துகிறவர்கள் மைதா சேர்க்காமலும் செய்யலாம் ருசி மாறது.0% fat மில்க் சேர்த்து செய்யும் போது மைதா சேர்த்தால் கலவை சற்று கெட்டியாக இருக்கும்.அதக்குதான் சேர்க்கிறோம்.இது இத்தாலியில் செய்யப்படும் மதிய உணவு.தக்காளி மசிந்து விட கூடாது..கிருஸ்பியாக இருக்கணும்.

No comments:

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?