Monday, June 29, 2009

இட்லி மன்சூரியன்

தேவையான பொருட்கள்:
======================

துண்டுகள் செய்த இட்லி - ஒரு கப்
நீளமாக நருக்கிய வெங்காயம் - ஒரு கப்
வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி
கடலை மாவு - இரண்டு டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு - கால் டேபிள்ஸ்பூன்
சோயா சாஸ் - கால் டீஸ்பூன்
சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன்
கெட்சப் - ஒரு டீஸ்பூன்
ரெட் கலர் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
பொடியாக நருக்கிய
கறிவேப்பிலை
மற்றும் கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
கடுகு - கால் டீஸ்பூன்
சோள மாவு - ஒரு டீஸ்பூன்

செய்முறை:
==========

@கடலை மாவு,அரிசி மாவு ,சிறிது உப்பு சேர்த்து நீர்க்க கலந்து கொள்ளவும்.

@துண்டு செய்த இட்லியை இக்கலவையில் இட்டு சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

@ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்ததும் கொத்தமல்லி கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கணும்.

@லேசாக வதங்கியதும் வெங்காயத்தாள் சேர்த்து வதவும்.

@பின்பு மூன்று சாஸ்களையும் சேர்த்து ரெட் கலர் சேர்த்து ஒரு தரம் வதக்கவும்.

@பொரித்து வைத்த இட்லியை அடுப்பில் சேர்த்து கிளறி சோள மாவை சிறிது நீரில் கலந்து கலவையில் ஊற்றி எல்லாம் ஒன்று சேர்ந்ததும் மல்லி இலை தூவி பரிமாறவும்.

@சுவையான இட்லி மஞ்சுரியன் ரெடி.

2 comments:

kavi said...

ammu,

ithu appadiya restaurants la sapdara taste irunthuchupa.supero super.En hus ku romba pudichu saptar.Thankspa.

நரசிம்மப்ரியா said...

அம்மு.இன்று இரவு இட்டிலி மன்சூரியன் தான் செய்தேன்.சென்னையில் ஒரு பாச்ட் புட் ரெஸ்டாரன்ட்டில் சாப்பிட்ட அனுபவம் இருந்தது.சூப்பர்.உங்கள் வீட்டில் இருப்பவர்கள் கண்டிப்பாக அதிக எடை இருப்பார்கள் இன்று நம்புகிறேன்

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?