Wednesday, June 17, 2009

மொறு...மொறு அடை

மொறு...மொறு அடை
========================
தேவையான பொருட்கள்:
---------------------------------

அரிசி - ஒரு கப்
கடலை பருப்பு - அரை கப்
உளுத்தம் பருப்பு - ஒன்றரை டேபிள்ஸ்பூ
ன்
பாசி பருப்பு - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
துவரம் பருப்பு - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
மிளக்காய் வற்றல் - 11
மிளகு - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய் பல் - மூன்று டேபிள்ஸ்பூன்(விரு
ப்பபட்டால்)
செய்முறை:
----------------
*அரிசி ,மிளகாய் வற்றல் மற்றும் பருப்புக
ள் அனைத்தையும் மூன்று மணி நேரம் ஊற வைத்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
*ஒரு மணி நேரம் அரைத்ததை வைத்து விட்டு பின்பு தேங்காய் பல்(சில்) சிறிதாக நறுக்கியது ,பொறியாக நருக்கிய கறிவேப்பிலை , ஒன்றிரண்டாக பொடித்த மிளகு ,உப்பு எல்லாவற்றையும் சேர்த்
து நன்கு கலக்கவும்.
*தோசைக்கல்லை சூடேற்றி ஒரு கரண்டி மாவு எடுத்து மெலிதாக தேய்த்து ஒரு டீஸ்பூன் ஆயில் விடவும் .
*நன்கு மொறு மொறுப்பாக ஆனதும் திருப்பி போடவும்.
*இரண்டு பக்கமும் நன்றாக வெந்து மொறு மொருப்பானவுடன் எடுத்து தக்காளி சாஸ் அல்லது எந்த வித சட்னி சாம்பா
ர் கூடவும் சாப்பிடலாம்.
*அடை ரெடி.

1 comment:

விஜயலக்ஷ்மி ரிஷிகேஷ் said...

அம்மு,

ரொம்ப நல்லா இருக்குபா அடை..எங்கள் வீட்டில் வேறு முறையில் செய்வோம்...இந்த முறையில் நேற்று செய்தேன் மிக நன்றாக இருந்தது...நான் ரொம்ப நாளா கேக்கறேன்..மைசூர் பாக் ரெசிபி குடுங்கள் என்று..சீக்கிரம் உங்கள் ப்ளாக்கில் எதிர்பாக்கறேன்..ஒரு முறை நீங்கள் திருநெல்வேலி வரும் பொழுது எங்கள் வீட்டிற்கு கண்டிப்பாக வாங்கள்..நான் கால் பண்ணும் போது அட்ரஸ் தரேன்..என் வீட்டில் தடா புடலா ஒரு விருந்து வைக்கறோம்(நமது குறிப்புகள் நறைய குடுங்கோ..என் மாமியார்,மாமனார் உங்க ரெசிபியோட விசிறி..தினமும் ஒரு தடவையாது உங்க ப்ளாக் போட சொல்லுவா நெட்ல..) உங்களுக்கும் மதுவிற்கும்..பாப்பா ரொம்ப ஈகர்ரா இருக்கா அர்ஜுனனை பார்க்க..குட்லக்.

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?