Tuesday, June 30, 2009

வெஜிடபிள் ப்ரைட் ரைஸ்



தேவையான
பொருட்கள்:
==========================

சதுரமாக நருக்கிய காய்கறி கலவை - ஒரு கப்
பச்சை மிளகாய் - ஏழு
பட்டை - ஒன்று
கிராம்பு - இரண்டு
பிரியாணி இலை - ஒன்று
பூண்டு - ஒரு பல்
அரிசி - ஒன்றரை கப்
உப்பு - தேவையான அளவு

ஒரு டீஸ்பூன் எண்ணெயில் வறுத்து பொடிக்க:
*************************************************

மல்லி தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - ஐந்து
பெருங்காயம் - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகு - ஒரு டீஸ்பூன்
மிளகாய் - இரண்டு
பூண்டு பல் - ஒன்று

செய்முறை:
===========
*ஒரு கடாயில் எண்ணெயை காய வைத்து பட்டை,கிராம்பு ,பிரியாணி இலை,பூண்டு போன்றவற்றை போட்டு பொரிய விடவும்.

*பின்பு பச்சை மிளகாய் சேர்த்து வறுத்து காய்கறி கலவை சேர்த்து வதக்கவும்.

*உப்பு சேர்த்து வதக்கி ஒரு நிமிடத்தில் அரிசியை சேர்த்து வதக்கவும்.

*ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் நீர் என்ற விதத்தில் விட்டு மூடி போட்டு மூடி வேக விடவும்.
*சாதம் வெந்ததும் அடுப்பை அணைத்து விட்டு பொடிக்க தேவையான வற்றை எண்ணெயில் வறுத்து பொடித்து சாதத்தில் தூவி கிளறவும்.
*கடைசியில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி பரிமாறவும்.

*சுவையான ப்ரைட் ரைஸ் ரெடி.

குறிப்பு:

குழந்தைகளுக்கு என்றால் காரத்தை குறைத்துக்கொள்ளவும்.

4 comments:

huskylover said...

ammu,

crystal clear photossoda unga recipe ellam pakum pothu naa ooruthupa.really excellent recipes.

கீதா ஆச்சல் said...

அம்மு மிக அழகாக ப்ரஸந்த் பன்னி இருக்கின்றிங்க. உங்கள் நல்ல கற்பனை திறன் இருக்கின்றது. கலக்குங்கள். அதிலும் முகத்தினை எவ்வளவு அழகாக வரைந்து இருக்கின்றிங்க.

ஹர்ஷினி அம்மா - said...

அம்மு நல்ல கலைநயத்துடன் உங்கள் சமையல் இருக்கிறது ... வாழ்த்துகள்.

Ammu Madhu said...

ஹர்ஷினி அம்மா,

உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி...கண்டிப்பாக செய்து பார்த்து விட்டு பின்னூட்டம் கொடுங்கள்...மூன்று நாட்களாக வீட்டில் இல்லாததால் உங்களின் முந்தின பதிவிற்கு உடனடியாக பதில் அளிக்க இயலவில்லை..
கேக் குறிப்பில் அப்படி குறிப்பிட்டு எப்படி அச்சு செய்ய வேண்டும் என்று கொடுத்தது சில பேர் எனக்கு மின்னஞ்சல் மூலமாக அவர்கள் ஊர் கடைகளில் அச்சு கிடைக்கவில்லை என்றும் வீட்டில் செய்வது பற்றி கொடுங்கள் என்றும் கேட்டிருந்தார்கள்..அதனால் தான் அப்படி குறிப்பிட்டு கொடுத்திருந்தேன்..
தங்களின் பின்னூட்டம் குறித்து மகிழ்ச்சி..ஹர்ஷினி ரொம்ப அழகு..அவள் குரலும் கூட ...

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?