Monday, June 29, 2009

பாகற்காய் பிட்லை

தேவையான பொருட்கள்:
----------------------------------

வேக வைக்க:
============
துவரம் பருப்பு - அரை கப்
கடலை பருப்பு - அரை கப்
நிலக்கடலை - கால் கப்
எண்ணெயில் வறுத்து அரைக்க:
===========================
தனியா - ஒரு கைப்பிடி
கடலை பருப்பு - அரை கைப்பிடி
உளுந்து - ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகாய் வத்தல் - ஏழு
பெருங்காயம் - சிறிதளவு
தேங்காய் - அரை கப்
தக்காளி - இரண்டு


புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
மல்லி இலை - சிறிதளவு
வெந்தயம் - சிறிதளவு
கறிவேப்பிலை - தாளிக்க
பாகற்காய் - ஒரு கப்(நறுக்கியது)

செய்முறை:
============
*முதலில் வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை
( தேங்காய் தக்காளி தவிர )இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெயில் வறுத்து தேங்காய் , தக்காளி சேர்த்து அரைத்து எடுக்கவும்.

*பருப்புகளை குழைய வேக வைத்து எடுக்கவும்.

*வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,சிறிது வெந்தயம் தாளித்து பாகற்காய் சேர்த்து உப்பு சேர்த்து புளி தண்ணீர் விட்டு நன்றாக வேக வைக்கவும்.

*காய் வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து தேவையான் அளவு நீர் சேர்த்து நிலக்கடலை சேர்த்து கொதிக்க விடவும்.

*கொதி வந்ததும் வேக வைத்த பருப்பை சேர்த்து கிளறி நுரைத்ததும் மல்லி இலை தூவி பரிமாறவும்.

*கடைசியில் விருப்பபட்டால் சிறிது தேங்காய் எண்ணெயை காயவைத்து அதில் கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.

*சுவையான பிட்லை ரெடி

குறிப்பு:
=======

இதனை சாதத்துடன் பிசைந்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.இதற்க்கு பக்க உணவாக பொரித்த அப்பளம் சூப்பராக இருக்கும்.

3 comments:

priya said...

hi, thanks for your lovely comment, you too have a great blog. Do visit again. Bye

Jaleela said...

அம்மு இதில் பாகற்காயின் அளவை குறிப்பிட வில்லையே

Ammu Madhu said...

ஜலீலா அக்கா,

தவறை சுட்டி காட்டியதற்கு மிக்க நன்றி.எப்படி விடுபட்டதென்று தெரியவில்லை.இப்பொழுது சேர்த்து விட்டேன்.கண்டிப்பாக செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்.சுவை நன்றாக இருக்கும்.

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?