Monday, June 22, 2009

கோசம்பரி

தேவையான பொருட்கள்:
...............................................

பாசி பருப்பு - ஒரு கப்
துருவிய வெள்ளரிக்காய் - கால் கப்
துருவிய மாங்காய் - கால் கப்
பச்சை மிளகாய் - ஐந்து
பொடியாக நருக்கிய கொத்தமல்லி - மூன்று டேபிள்ஸ்பூன்
பொடியாக நருக்கிய கறிவேப்பிலை - மூன்று டீஸ்பூன்.
உப்பு - தேவையான அளவு
கடுகு - கால் டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - ஒன்று
பெருங்காயம் - மூன்று சிட்டிகை
எலுமிச்சை சாறு - இரண்டு சொட்டுகள்.
துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
........................

@பாசி பருப்பை மூழ்கும் அளவு நீர் விட்டு முக்கால் மணி நேரம் ஊற விடவும்.

@வெள்ளரிக்காய்யை தோல் சீவி துருவி கொள்ளவும்.

@மாங்காயை துருவி கொள்ளவும்.

@பச்சை மிளகாய்யை மிக பொடியாக நறுக்கி கொள்ளவும்.

@ஊற வைத்த பருப்பை நீரில் இருந்து பிழிந்து எடுத்து அதில் வெள்ளரிக்காய்,மாங்காய் சேர்த்து கலக்கவும்.

@பச்சை மிளகாய்,கொத்தமல்லி,கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும்.

@கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,இஞ்சி,மிளகாய் வற்றல், பெருங்காயம் தாளித்து கலவையில்
கொட்டவும்.

@உப்பு சேர்த்து கலக்கி எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிடவும்.

No comments:

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?