Wednesday, July 1, 2009

டெடி பியர் கேக்



தேவையான பொருட்கள்:
======================

மைதா - ஒரு கப்
பேகிங் பௌடர் - ஒரு டீஸ்பூன்
பேகிங் சோடா - இரண்டு டீஸ்பூன்
சர்க்கரை - கால் கப்
வாழைபழம்(கட்டியில்லாமல் நன்கு அரைத்து) - அரை கப்
பால் - கால் கப்
வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
ரோஸ் எசன்ஸ் - ஒரு ட்ராப்(தேவைப்பட்டால்)

செய்முறை:
===========

*முதலில் பேகிங் பௌடர்,பேகிங் சோடா,சர்க்கரை,பால் எல்லாவற்றையும் நன்கு அடிக்கவும்.

*வாழைபழத்தை மிக்சியில் போட்டு இரண்டு டேபிள்ஸ்பூன் நீர் விட்டு நன்கு அரைத்தெடுக்கவும்.

*அரைத்ததை பால் கலவையில் சேர்த்து கலக்கவும்.

*பின்பு மைதா சேர்த்து கட்டி இல்லாமல் கலக்கவும்.

*வெண்ணெயை உருக்கி கலவையில் கொட்டி எசன்ஸ் சேர்த்து கிளறவும்.

*ஓவன்னை 170 டிகிரி பாரன்ஹீட்டில் முற்சூடு செய்யவும்.

*கலக்கிய மாவு கலவையை ஓவன் ட்ரேயில் விட்டு முப்பது நிமிடம் பேக் செய்யவும்.

*நன்கு பேக் ஆனதும் வேண்டும் என்ற வடிவில் வெட்டி ஐசிங் சுகர் அல்லது விரும்பினவற்றை வைத்து அலங்கரிக்கவும்.
*டெடி பியர் கேக் ரெடி.

குறிப்பு:
=======
இந்த கேக்கினை மைக்ரோவேவ்விலும் செய்யலாம்.ஆனால் ஓவன்னை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது சுவை கொஞ்சம் கம்மியாக தான் இருக்கும்.ஓவன் இல்லாதவர்கள் மைக்ரோவேவ்வில் செய்யும் பொழுது முதலில் ஐந்து நிமிடம் வைத்து எடுத்து பார்த்து விட்டு பின்பு மூன்று மூன்று நிமிடங்களாக வைத்து தயார் ஆகி விட்டதா என்று பார்க்கவும்.சரியான பதம் வந்ததும் எடுத்து விருப்பப்பட்ட வடிவில் வெட்டி பரிமாறவும்.

மேலே கொடுத்துள்ளது போல் டெடி பியர் வடிவத்தில் கேக் செய்ய:
****************************************************************************

ஒரு அட்டை எடுத்து அதில் டெட்டி பியர் வரைந்து அதை பிளேடால் வெட்டி கொள்ளவும்.கேக் வெந்து வெளியில் எடுத்ததும் அதன் மேல் வெட்டி வைத்துள்ள அட்டையை வைத்து லேசாக அழுத்தம் கொடுத்தால் கேக்கின் உள்ளே இறங்கி விடும்.
பின்பு லேசாக் எடுத்து விட்டு கத்தியால் மோல்ட் செய்து மேலும் ஒரு நிமிடம் ஓவன்னில் வைத்து எடுக்கவும்.டெட்டி பியர் கேக் ரெடி.
செய்து பார்த்து விட்டு கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.

5 comments:

ஹர்ஷினி அம்மா - said...

அம்மு டெடி பியர் கேக் அழகாக இருகிறது..

/ஒரு அட்டை எடுத்து அதில் டெட்டி பியர் வரைந்து அதை பிளேடால் வெட்டி கொள்ளவும்.கேக் வெந்து வெளியில் எடுத்ததும் அதன் மேல் வெட்டி வைத்துள்ள அட்டையை வைத்து லேசாக அழுத்தம் கொடுத்தால் கேக்கின் உள்ளே இறங்கி விடும்/

இப்பதான் விதவிதமான கேக் மொல்ட் கடையில் கிடைகிறதே !!!!

Ammu Madhu said...

ஹாய் ஹர்ஷினி அம்மா ,

நான் அப்படி சொன்னது இந்தியாவில் தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு..அங்கு மிக முக்கிய ஊர்களில் தான் எனக்கு தெரிந்தவரை மோல்ட் கிடைக்கிறது..எங்க ஊர் பக்கமெல்லாம் இன்னும் அந்த அளவு கிடைப்பதில்லை..அதன் அப்படி கொடுத்தேன்..:).மிக்க நன்றி..

sangi said...

Hi Ammu,I can't read ur recipes.Thank u very much for visiting my blog...nice blog!

Jaleela said...

டியர் அம்மு சூப்பர், டிசைன் ரொம்ப ஜோர் ஆனா பேக்கிரவுண்டு கருப்பு என்பதால் போஸ்டிங் கலர் கொஞ்சம் அதுக்கு மேட்ச் ஆகுறாப்பல போடுஙக்ள்.

எழுத்துக்கள் டார்க்கில் டார்க்காக இருக்கு

www.jaleelacookery.blogspot.com

Ammu Madhu said...

ஜலீலா அக்கா,

கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி..

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?