Wednesday, July 15, 2009

ஹாட் ஈசி நூடுல்ஸ்



தேவையான பொருட்கள்:
***************************

நூடுல்ஸ்
- ஒரு கப்
விருப்பப்பட்ட காய் கறிகள் - ஒரு கப் (நீளமாக மெலிதாக வெட்டியது அல்லது சதுரமாக வெட்டியது)
பச்சை
பட்டாணி - கால் கப்
அஜினமோட்டோ
- ஒரு சிட்டிகை
சில்லி
பிளேக்ஸ் - ஒரு டீஸ்பூன்
பச்சை
மிளகாய் - நான்கு
மசாலா
பேஸ்ட் - ஒரு டேபிள்ஸ்பூன்
சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன்
சோயா
சாஸ் - ஒரு சொட்டு
உப்பு
- தேவையான அளவு
ஸ்ப்ரிங்
ஆனியன் - கால் கப் (நறுக்கியது)

செய்முறை
:
**************

*
முதலில் நூடுல்ஸ்சை நான்கு கப் நீர் விட்டு மிதமான தீயில் ஒன்றும் பாதியுமாக வேக வைக்கவும்.

*
வெந்ததும் அதை ஒரு வடிகட்டியில் போட்டு நீரை வடித்து விட்டு குளிர் நீரில் நூடுல்ஸ்சை இரண்டு நொடிகள் அலசவும்.

*பின்பு நன்றாக நீரை வடித்து விட்டு ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு பிசிறி ஆற விடவும்.

*
கடையில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மசாலா பேஸ்ட் மற்றும் சில்லி ப்ளேக்ஸ்சை போட்டு பச்சை வாடை போகும் அளவு வதக்கி அஜினமோட்டோ காய்கறிகள்,பச்சை மிளகாய் போட்டு ஒன்றும் பாதியுமாக வதக்கவும்.

*
பின்பு சில்லி சாஸ் ,சோயா சாஸ் விட்டு கிளறி உப்பு சேர்த்து கலக்கவும்.

*ஸ்ப்ரிங் ஆனியன்ஸ் தூவி கிளறவும்.

*
ஆறவைத்துள்ள நூடுல்ஸ்சை சேர்த்து கிளறி எல்லாம் ஒன்று சேர்ந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

*
விருப்பபட்டால் சிறிது நெய் சேர்த்து பரிமாறவும்.

குறிப்பு
:
*********

#சில்லி ப்ளேக்ஸ் இல்லாவிட்டால் மிளகாய் வற்றலை சிறிது நீர் சேர்த்துமைய அரைத்து அதை உபயோகிக்கவும்.கெட்டியாக இருக்குமாறு பார்த்துகொள்ளவும்.

#மசாலா பேஸ்ட் இல்லாவிட்டால் சில்லி பொடி,தனியா பௌடர்,மஞ்சள் பொடி மூன்றையும் சிறிது நீர் விட்டு கலந்து உபயோகிக்கவும்.

#காய்கறிகளை வதக்கும் பொழுது நீர் விட கூடாது.

#
இந்த விதமாக செய்யும் நூடுல்ச்சிர்க்கு கேரட்,பீன்ஸ்,கோஸ்,பச்சை பட்டாணி மட்டும் போட்டு செய்தால் சுவை நன்றாக இருக்கும்.இந்த மூன்றும் இல்லாத பட்சத்தில் வேறு காய்கள் பயன்படுத்தலாம்.

4 comments:

அன்புடையாள் said...

அம்மு,
உங்க கைவண்ணமே கைவண்ணம்.எவ்வளவு அழகா இருக்கு...பாக்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு..என் குழந்தை இதை பார்த்துவிட்டு..."அம்மா,எவ்வளவு அழகா இந்த ஆண்டி பண்ணிருக்காங்க...என் எப்டி நீ பண்ண மாட்டேன்கர"னு கேக்கறா..உங்களுக்கு ரொம்ப கற்பனைவளம் அதிகம்...ரொம்ப சூப்பர்...தொடர்ந்து அதிக குறிப்புகள் குடுக்க வாழ்த்துக்கள்..நான் ரொம்ப நாட்களாக உங்க பிளாக் பாத்துக்கிட்டு இருக்கேன்..இப்போ தான் கமென்ட் குடுக்க நேரம் கிடைத்தது...

Mrs.Menagasathia said...

ஹாய் அம்மு,உங்க டெகரேஷன்லாம் ரொம்ப அழகா இருக்கு.பார்க்கும் போதே சாப்பிடத் தோனுது.உங்களிடம் டெகரேஷன் பத்தி கத்துக்கனும்.மேலும் தொடர வாழ்த்துக்கள்!!

Bharathy said...

:) Ammu, First time here..and you have such a Sweet and Homely blog!
..Enakku Rommmba pudichirikku ungal arumayana Samayal Kurippukal.. :)
Thudarnthu ezhuthungal.. :)

Ammu Madhu said...

பாரதி ரொம்ப நன்றி.உங்கள் பெயர் நன்றாக இருக்கு.உங்களுக்கு என் குறிப்புகள் புடித்தது குறித்து ரொம்ப மகிழ்ச்சி.கண்டிப்பாக செய்து பாருங்கள்..

அன்புடன்,
அம்மு.

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?