Tuesday, July 21, 2009

அக்காரவடிசல்(கோவில்களில் செய்யும் முறை)


தேவையான பொருட்கள்:
***************************
தண்ணீர் சேர்க்காத பால் - நாற்பது டேபிள்ஸ்பூன்.
அரிசி - ஒரு டேபிள்ஸ்பூன்
நெய் - ஆறு டேபிள்ஸ்பூன்
வெல்லம் - மூன்று டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - இரண்டு டேபிள்ஸ்பூன்
பிஸ்தா பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
முத்திரி - நான்கு டீஸ்பூன்

செய்முறை:
*************

@ முதலில் அடுப்பில் பால் மற்றும் அரிசியை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

@ நன்றாக கொதித்து வற்றி தக்காளி பதம் வந்ததும் மூன்று டேபிள்ஸ்பூன் நெய் மற்றும் வெல்லம்,சர்க்கரை,முந்திரி,பிஸ்தா சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் நன்றாக கிளறவும்.

@ மீதம் உள்ள நெய்யை ஊற்றி கிளறி கேசரி பதம் வதும் நெய் தடவிய
தட்டில் இட்டு சமமாக பரப்பி ஆறியதும் விருப்பத்திற்கேற்ப துண்டுகள்
போடவும்.

@ சுவையான அக்காரவடிசல் ரெடி.

குறிப்பு:
*********
# பொதுவாக கோவில்களில் செய்யும் பொழுது துண்டுகள் போட மாட்டார்கள் அப்படியே சர்க்கரை பொங்கல் போல் தான் தருவார்கள்.நான் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் என்பதால் துண்டுகள் போட்டுள்ளேன்.

# சர்க்கரை நோய் உள்ளவர்கள் சுகர் ப்ரீ போட்டும் செய்யலாம்.அல்லது கருப்பட்டியிலும் செய்யலாம்.கருப்பட்டியில் செய்தால் சுவை சற்று வித்யாசப்படும்.

# விருப்பபட்டால் பால் கொதிக்கும் பொழுது ஏதேனும் ஒரு கலர் சேர்த்து கொள்ளலாம்.

5 comments:

கீதா ஆச்சல் said...

நான் இதுவரை இப்படி செய்தது இல்லை...படிக்கும் பொழுது மிகவும் சுவையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இந்த வாரம் வெள்ளிகிழமை இதனை கண்டிப்பாக செய்யவேண்டும்.
உங்கள் presentation எப்பொழுதும் போல சூப்பர்

Ammu Madhu said...

கீதா அக்கா,

கண்டிப்பா செய்து பாருங்கள்..நன்றாக வரும்..செய்து பார்த்து விட்டு கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்,
அம்மு.

சந்தர் said...

அக்காரவடிசல் திருச்சி பக்கம் போகும்போது ஜங்ஷன் பக்கத்தில் ஒரு ஓட்டலில் சாப்பிட்டிருக்கிறேன். உங்கள் செய்முறையை படிக்கும் போது, மீண்டும் சுவைக்கத் தோன்றுகிறது. அது சரி புகைப்படத்தில் உள்ள ஸ்வத்திக் இடம்வலம் மாறியிருக்கிறதா?

Ammu Madhu said...

ஆமாம் சந்தர்..போட்டோவ க்லாக்வைஸ் திருப்ப முயற்சித்தா போட்டோ கிளியர்ரா இல்லாத மாறி தோணிச்சு அதான் இப்டியே போட்டுட்டேன்.

//அக்காரவடிசல் திருச்சி பக்கம் போகும்போது ஜங்ஷன் பக்கத்தில் ஒரு ஓட்டலில் சாப்பிட்டிருக்கிறேன்//

ஒ..ஹோட்டல்களில் அக்காரவடிசல் கிடைக்கும் என்பது நீங்கள் சொல்லி தான் கேள்வி படுகிறேன்..எங்கள் ஊர் பக்கமெல்லாம் கிடைக்காது..இது ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் செய்யும் செய்முறை..செய்து பாருங்கள் ..சூப்பரா இருக்கும்..தங்கள் கருத்திற்கு நன்றி..

அன்புடன்,
அம்மு.

R.Gopi said...

//தண்ணீர் சேர்க்காத பால் - நாற்பது டேபிள்ஸ்பூன்.//

அம்மு...இது என்ன ஸ்பூன் கணக்கு...... டம்ளர் அளவு சரியா வராதா??

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?