Thursday, July 23, 2009

காரட் ஹல்வா(இது என்னுடைய அறுபதாவது குறிப்பு )

தேவையான பொருட்கள்:
****************************
துருவிய காரட் - ஒரு கப்
பால் - இரண்டு கப்
தண்ணீர் - ஒரு கப்
முந்திரி,பாதாம் - மூன்று டீஸ்பூன் (துருவியது)
நெய் - நான்கு - டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - ஒரு கப் அல்லது முக்கால் கப்

செய்முறை
:
*************

@ முதலில் ஒரு வாணலியில் துருவிய காரட் மற்றும் பால்,தண்ணீர்
சேர்த்து மிதமான தீயில் நன்கு வேக விடவும்.

@ பால் நன்கு வற்றி காரட் வெந்து இரண்டும் சேர்ந்து சற்று
கெட்டியானவுடன் சர்க்கரை மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து
நன்கு கிளறவும்.

@ எல்லாம் ஒன்று சேர்ந்ததும் மீதம் இருக்கும் நெய் சேர்த்து முந்திரி சேர்த்து
கிளறவும்.

@ ஹல்வா பதம் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி சூடாக இருக்கும்
பொழுதே பரிமாறவும்.

@ நெய் வாசனையுடன் சுவையான காரட் ஹல்வா ரெடி.

குறிப்பு:
*********
இனிப்பு அதிகமாக விரும்புபவர்கள் சர்க்கரையின் அளவை சிறிது அதிகப்படுத்திக்கொள்ளலாம்.சர்கரைக்கு பதிலாக சுகர் ப்ரீயிலும் செய்யலாம்.சர்கரையின் அளவு தான் சுகர் ப்ரீக்கும்.செய்து பார்த்து விட்டு கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.

எனது அடுத்த குறிப்பு எண்ணெய் முழு கத்திரிக்காய் குளம்பு.


16 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

நன்றி.. மிக மிக நன்றி..

Ammu Madhu said...

கருத்திற்கு நன்றி ராஜ்..வாழ்த்துக்கள்..

அன்புடன்,
அம்மு.

dharshini said...

very nice receipe..

Ammu Madhu said...

ஹாய் தர்ஷினி,

உங்கள் கருத்து குறித்து மகிழ்ச்சி..செய்து பாருங்கள் ரொம்ப நன்றாக இருக்கும்..

அன்புடன்,
அம்மு.

சம்பத் said...

Nice post... Congrats for your 60th post....

Ammu Madhu said...

நன்றி சம்பத்..

அன்புடன்,
அம்மு.

சரவணகுமரன் said...

கேரட் ஹல்வாவும் ஐஸ் க்ரிமும் எனக்கு பிடித்த சூப்பர் காம்பினேஷன்.

சரவணகுமரன் said...

ஏங்க, இந்த பிரெட் வச்சு ஹல்வா பண்ணுவாங்களே? அது எப்படிங்க?

பிரெட் வச்சு வேற என்ன பண்ண முடியும்?

Ammu Madhu said...

சரவணா குமரன் உங்கள் கருத்திற்கு நன்றி..காரட் ஹல்வா,ஐஸ் கிரீம் காம்பினேஷன் வித்யாசமா இருக்கு..பிரட் ஹல்வா குறிப்பு இனும் இரண்டொரு நாட்களில் கொடுக்கிறேன்.பிரட்டில் எக்கசக்கமாக செய்யலாம் எடுத்துக்காட்டிற்கு சான்விச், பிரட் நூடுல்ஸ்,பிரட் உப்மா,பிரட் ச்டிக்க்ஸ்,பிரட் பொரியல் இப்படி கணக்கு நீண்டுக்கொண்டே போகும்..

அன்புடன்,
அம்மு.

சரவணகுமரன் said...

//காரட் ஹல்வா,ஐஸ் கிரீம் காம்பினேஷன் வித்யாசமா இருக்கு//

நீங்க ட்ரை பண்ணியதில்லையா? பட்டர் ஸ்காட்ச் அல்லது வெணிலாவுடன் சூப்பராக இருக்கும். ஜாமூனும் நல்லா இருக்கும்.

சரவணகுமரன் said...

//பிரட் ஹல்வா குறிப்பு இனும் இரண்டொரு நாட்களில் கொடுக்கிறேன்//

ரொம்ப நன்றிங்க...

ரகுநாதன் said...

appdiye padam pottiruntha romba suvaiyaa irunthirukkum (sorry for tamingilish typing)

Ammu Madhu said...

வருகைக்கு நன்றி ரகு.படம் சீக்கிரம் சேர்த்து விடுகிறேன்.

அன்புடன்,
அம்மு.

பிரியமுடன்.........வசந்த் said...

று, ம் வித்தியாசம் தெரியாம போயிடுச்சுங்க சேம் சேம் ஆயிடுச்சு சாரி ஒகே டேக் இட் ஈஸி

http://myerecipecorner.blogspot.com said...

Excuse for writing my comments in english. I should appreciate u for writing such a beautiful blog. Keep rocking!

குறை ஒன்றும் இல்லை !!! said...

எங்கிருந்தாலும் உடனடியாக இந்த பக்கத்திற்கு வரும் படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்.. மீறினால் ஜக்கம்மாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்....
http://yellorumyellamum.blogspot.com/2009/07/blog-post_28.html

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?