Sunday, July 19, 2009

ப்ரொக்கோலி புளிக்கறி

தேவையான பொருட்கள்:
======================
துண்டு செய்யப்பட பிரொக்கோலி - ஒரு கப்
நீளமாக நருக்கிய வெங்காயம் - அரை கப்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன் (விருப்பப்பட்டால்)
புளி கரைசல் - ஒன்றரை கப்
உப்பு -தேவையான அளவு
மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
மல்லி தூள் - மூன்று டீஸ்பூன்
வெல்லம் - ஒரு டீஸ்பூன்
தாளிப்பதற்கு:
***************
கடுகு
சீரகம்
சோம்பு(தேவைப்பட்டால்)
மிளகாய் வற்றல்
பச்சை மிளகாய்
பெருங்காயம்
நல்லெண்ணெய் - ஒரு குழிகரண்டி

செய்முறை:
===========

*முதலில் எண்ணெயை காய வைத்து தாளிக்க வேண்டியவற்றை தாளிக்கவும்.

*பின்பு இஞ்சி பூண்டு விழுது மற்றும் வெங்காயம் சேர்த்து லேசாக வதங்கியபின் பிரொக்கோலி சேர்த்து வதக்கவும்.

*உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் குறைந்த தணலில் வேக விடவும்.

*பின்பு புளி கரைசலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.தண்ணீர் பாதியாக வற்றியதும் மூன்று தூள்களையும் சேர்த்து கிளறி பச்சை வாசனை போனதும் வெல்லம் சேர்த்து இறக்கவும்.

*சுவையான சத்தான ப்ரோகோலி கறி தயார்...

*செய்து பார்த்துவிட்டு கருத்தை பரிமாறி கொள்ளுங்கள்.

No comments:

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?