Friday, July 31, 2009

பிரட் ஹல்வா



தேவையான பொருட்கள்:
*****************************
நருக்கிய பிரட் துண்டுகள் - ஒரு கப்
பால் - ஒரு கப்
முந்திரி - பத்து
நெய் - ஐந்து டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - அரை கப்

செய்முறை:
**************

# முதலில் பிரட் துண்டுகளில் பாலை விட்டு முந்திரி சேர்த்து ஒரு நிமிடம்
ஊற வைத்து மிக்சியில் நன்றாக அரைத்து கொள்ளவும்.

# அரைத்த கலவையை ஹல்வா கிளரும் பாத்திரத்தில் விட்டு மிதமான
தீயில் நன்கு கிளறவும்.

# இரண்டு நிமிடத்தில் வெந்துவிடும்.சர்க்கரை சேர்த்து கிளறவும்.

# சர்க்கரை கரைந்ததும் எடுத்து வைத்துள்ள நெய்யில் பாதி நெய்யை
ஊற்றவும்.

# எல்லாம் ஒன்று சேருமாறு கிளறவும்.நன்கு அழுத்தி தொடர்ந்து கிளறவும்
இல்லை என்றால் அடிபிடித்துவிடும்.

# ஒரு நிமிடத்தில் மீதம் உள்ள நெய்யையும் ஊற்றி நன்கு கிளறி
பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும் வேண்டும் என்கிற வடிவத்தில் வைத்து
பரிமாறவும்.

# இந்த ஹல்வா எளிதில் தாயரித்து விடலாம்.மிக சுவையாக இருக்கும்.

# செய்து பார்த்து விடடு கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்..



21 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

கலக்கறீங்க போங்க.. இன்னும் எதில் எல்லாம் ஹல்வா செய்யப்போறீங்க?

R.Gopi said...

//இந்த ஹல்வா எளிதில் தாயரித்து விடலாம்.//

எளிதில் தயாரித்து விடலாம் போலத்தான் இருக்கிறது....

//மிக சுவையாக இருக்கும்.//

சுவையாக இருக்கும், தெரியும் தெரியும்...

//# செய்து பார்த்து விடடு கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்..//

இதுதான் இப்போதைக்கு முடியாது..... வேணும்னா, இந்த போட்டோவ மட்டும் பாத்துக்கறேன்.....

நன்றி.....

Mrs.Menagasathia said...

சூப்பராயிருக்கு அம்மு,அதைவிட ப்ரெஷண்டேஷன் கலக்கல்.

Ammu Madhu said...

பாராட்டிற்கும் வருகைக்கும் நன்றி மேனகா,அடிக்கடி வாங்க..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

//கலக்கறீங்க போங்க..//
பாராட்டிற்கு நன்றி ராஜ்..
//இன்னும் எதில் எல்லாம் ஹல்வா செய்யப்போறீங்க?//
ராஜ் நக்கல் பண்றீங்களா ?ஆர்வத்தில் கேகறீங்களா?
ஆர்வத்தில் கேட்பதாக இருந்தால் எதில் எல்லாம் என்று சொல்லமாட்டேன் ஸர்ப்ரைஸ்ஸாக வந்துகொண்டே இருக்கும் ஹி...ஹி...:)

வருகைக்கு நன்றி ராஜ் அடிக்கடி வாங்க..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

பாராட்டிற்கு நன்றி கோப்பி ..இப்பொழுதே செய்து பார்க்க வேண்டும் என்று இல்லை உங்களுக்கு எப்போ முடியுமோ அப்போ செய்து பாருங்கள்..

வருகைக்கு நன்றி கோபி அடிக்கடி வாங்க..

அன்புடன்,
அம்மு.

குறை ஒன்றும் இல்லை !!! said...

//ஆர்வத்தில் கேகறீங்களா?
ஆர்வத்தில் கேட்பதாக இருந்தால் எதில் எல்லாம் என்று சொல்லமாட்டேன் ஸர்ப்ரைஸ்ஸாக வந்துகொண்டே இருக்கும் ஹி...ஹி...:)//

ஆர்வத்தில் தாங்க கேட்குறேன்.. நான் எப்படி சாப்பிடுவேண்ணு என் பதிவிலேயே போட்டு இருக்கேன்..அதனால அசத்துங்க.. காத்திருக்கோம்..

சரவணகுமரன் said...

சுலபமா இருக்கும் போல. ரொம்ப நன்றிங்க...

வடுவூர் குமார் said...

பார்ப்போம்,மனைவி வீட்டில் இருக்கும் நேரமா பார்த்து பண்ணி அவுங்களுக்கும் கொடுக்கனும்.நானே பண்ணி நானே சாப்பிட்டால் சுவை இருக்காது. :-)

Anu said...

romba nala eruku unga bread halwa. Usualla bread vangi konja nala ella expire aki kela poturuvan so entha time etha try pani parkuran...
Thanks for the recipe......

Mrs.Menagasathia said...

அனைவருக்கும் இனிய நண்பர்கள் தினவாழ்த்துக்கள்!!

ஹர்ஷினி அம்மா - said...

அம்மு சூப்பர்... பார்த்தாலே சாப்பிடனும் போல இருக்கு :-)

வால்பையன் said...

நம்பி சாப்பிடலாமா!?

Ammu Madhu said...

வால் பையன் கண்டிப்பா நம்பி சாப்டுங்க.நான் கேரண்டி.சூப்பெரா இருக்கும்.வருகைக்கு நன்றி.அடிக்கடி வாங்க.

அன்புடன்,
அம்மு.

Saranya.V said...

மிக எளிதான செய்முறையை கூறி இருக்கிறீர்கள்.
இன்றே செய்து பார்க்கிறேன்

Ammu Madhu said...

தாமதமான பதிலிற்கு மனிக்கவும்..மேனகா உங்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..

உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

ஹர்ஷினி அம்மா உங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி..கண்டிப்பாக செய்து பாருங்கள்..

உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

சரவணா குமரன் இந்த ஹல்வா சுலபமாக தான் இருக்கும்..கண்டிப்பாக செய்து பாருங்கள்..

உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

வடுவூர் குமார் ,
//பார்ப்போம்,மனைவி வீட்டில் இருக்கும் நேரமா பார்த்து பண்ணி அவுங்களுக்கும் கொடுக்கனும்//

கண்டிப்பாக செய்து பாருங்கள்..

//நானே பண்ணி நானே சாப்பிட்டால் சுவை இருக்காது. :-)//

அது சரி:-)

உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

அனு நானும் முன்னாடி எல்லாம் பிரட் வாங்கி என பண்ணனு தெரியாம வேஸ்ட் ஆய்ரும்..அப்புறம் தான் இப்டி ட்ரை பணினேன்...கண்டிப்பாக செய்து பாருங்கள் ..

உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

நன்றி சரண்யா..கண்டிப்பாக செய்து பாருங்கள்..

உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

அன்புடன்,
அம்மு.

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?