Tuesday, July 28, 2009

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு (மதுரை பக்கம்)



தேவையான பொருட்கள்:
****************************
சின்ன கத்திரிக்காய் - ஐந்து
சின்ன வெங்காயம் - நான்கு
பச்சை மிளகாய் - மூன்று
புளி - ஒரு எலுமிச்சம்பழம் அளவு
பெருங்காயம் - வாசனைக்கு
நல்லெண்ணெய் - ஒரு குழிகரண்டி
கறிவேப்பிலை - தாளிப்பதற்கு
கொத்தமல்லி - தேவைக்கேற்ப
உப்பு - தேவையான அளவு
வெல்லம் - கால் டீஸ்பூன் (விருப்பபட்டால்)

வறுத்து பொடிக்க:
================
தனியா - ஆறு டேபிள்ஸ்பூன்
கடலை பருப்பு - ஐந்து டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - மூன்று டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல் - பதினொன்று (காரத்திற்கேற்ப)
பெருங்காயம் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
ஜீரகம் - ஒரு டீஸ்பூன்
தேங்காய் துருவல் - மூன்று டீஸ்பூன் (விருப்பபட்டால்)

மேலே கொடுத்துள்ள பொருட்களை ஒரு டீஸ்பூன் எண்ணெய்யில் வறுத்து நன்றாக பொடித்துக்கொள்ளவும்.காய்க்கு தேவையான அளவு மட்டும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

செய்முறை:
*************

@ புளியை மூன்று அல்லது நான்கு டம்பளர் நீரில் கெட்டியாக
கரைத்துக்கொள்ளவும்.

@ கத்தரிக்காயை முழுதாக வெட்டாமல் காம்பு வரை நான்கு பாகமாக
அறுத்துக்கொள்ளவும்.

@ கத்தரிக்காயுள் பொடித்த பொடியை நன்றாக அமுக்கி நிரப்பி வைக்கவும்.

@ நிரப்பியது போக மீதமுள்ள பொடியை புளியுடன் சேர்த்து கரைக்கவும்.

@ ஒரு கடையில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை போட்டு
பொரியவிடவும்.

@ பின்பு வெங்காயம் மற்றும் கத்தரிக்காய் ,பச்சை மிளகாய் சேர்த்து அடுப்பு
தணலை மீடியமில் வைத்து கத்தரிக்காயை வேக விடவும்.

@ வெந்ததும் புளி கரைசலை ஊற்றி உப்பு மற்றும்
கொத்தமல்லி,பெருங்காயம் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு எண்ணெய்
கக்க ஆரமித்ததும் தேவைப்பட்டால் வெல்லம் சேர்த்து இறக்கவும்.
@ சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு தயார்.செய்து பார்த்து
கருத்தை
பகிர்ந்து கொள்ளுங்கள்.

என்னுடைய அடுத்த குறிப்பு:பிரட் ஹல்வா


6 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

நன்றி அம்மு... உங்க கேரட் ஹல்வா முயற்சி செய்தோம்.. மிகவும் அருமையாக இருந்தது.. நன்றி,,

Ammu Madhu said...

நன்றி ராஜ்...உங்களுக்கு பிடித்திருந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி..

அன்புடன்,
அம்மு.

கீதா ஆச்சல் said...

எனக்கு மிகவும் பிடித்த எண்ணெய் கத்திரிகாய்...கலக்கலோ கலக்கல்..

Ashwini said...

this is one of my fav dish... i am glad to read these recipes in tamil.. thanks for stopping by blog!!!

pioneer said...

maraththi mokku endral enna vilakkavum

Ammu Madhu said...

Its star anise pioneer.

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?