Monday, August 3, 2009

கீரை தொக்கு

தேவையான பொருட்கள்:
***************************

கீரை - ஒரு கட்டு
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் - ஏழு(காரத்திற்க்கேர்ப்ப)
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு:
============
கடுகு
கறிவேப்பிலை
உளுத்தம் பருப்பு
பெருங்காயம்

செய்முறை:
*************

* முதலில் ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி பச்சை
மிளகாய்,சிறிது கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

* கீரையை பொடியாக வெட்டி கொள்ளவும்.

* கறிவேப்பிலை வெடித்ததும் கீரையை போட்டு ஒரு தரம் வதக்கி கீரை
மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு கொத்தமல்லி,உப்பு சேர்த்து வேக விடவும்.

* கீரை வெந்ததும் அதை எடுத்து வடிகட்டியில் நீரை வடித்து கீரையை
மிக்சியில் மைய அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

* ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க
வேண்டியவற்றை தாளித்து அரைத்த கீரையை போட்டு அரை நிமிடம்
வதக்கி எடுக்கவும்.

* சுவையான கீரை தொக்கு ரெடி.

* இதனை சப்பாத்தி,பூரி,இட்லி,தோசை,மிளகாய்குழம்பு சாதத்துடன் சாப்பிட
மிக சுவையாக இருக்கும்.

10 comments:

டக்ளஸ்... said...

ட்ரை பண்ணி பாக்கலாம்.

Govind said...

Miga Arumai. Thodarattum Thanggal thondhu.

Intha boomiyil vaalvathu...unavu thinna thhane? Athum-athuvum, vagai-vagaiyaai - thibathil ulla sugame...thani sugham thaan sagathari...

unggalai patri konjam sollunggalen!.

குறை ஒன்றும் இல்லை !!! said...

நிறைய இது போல எழுதுங்க ...நல்லா இருக்கும் போல இருக்கே!!!

Mrs.Faizakader said...

அம்மு மேடம் இது கீரை தொக்கா ?அல்லது கிளி தொக்கா?
உங்கள் கைவண்ணம் உங்கள் ப்ளாக் எல்லாமே ரொம்ப நல்லாயிருக்கு

பிரியமுடன்.........வசந்த் said...

கீரையா அது எப்டி இருக்கும்?

ஏன்னா கத்தார்ல அதெல்லாம் கிடைக்க மாட்டேங்குதே மறந்துடும்போல்...

Ammu Madhu said...

//கீரையா அது எப்டி இருக்கும்?

ஏன்னா கத்தார்ல அதெல்லாம் கிடைக்க மாட்டேங்குதே மறந்துடும்போல்...//

வசந்த் கத்தார்ல கிடைக்குமே..என் தோழி ஒருவர் கத்தார்ல தான் இருக்காங்க..ஒரு வேளை நீங்க இருக்கற இடத்தில் கிடைக்கவில்லையோ?வால்மார்ட்,பி.ஜெ.எஸ்..போன்றவற்றில் முயற்ச்சி செய்து பாருங்கள்..

அன்புடன்,
அம்மு.

கீதா ஆச்சல் said...

எப்பொழுதும் போல presentation Superb

நட்புடன் ஜமால் said...

நீங்கள் சமைத்திருப்பதை பற்றி கருத்திடுவதை விட

அதை நீங்கள் அலங்கரித்திருக்கும் விதம் மிக அருமையாக இருக்கு

Ammu Madhu said...

கண்டிப்பாக ட்ரை பண்ணுங்கள் டக்ளஸ்...வருகைக்கு நன்றி தொடர்ந்து வாங்க...

அன்புடன்,
அம்மு..

Ammu Madhu said...

//Miga Arumai. Thodarattum Thanggal thondhu.

Intha boomiyil vaalvathu...unavu thinna thhane? Athum-athuvum, vagai-vagaiyaai - thibathil ulla sugame...thani sugham thaan sagathari...

unggalai patri konjam sollunggalen!.//

தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி..நீங்கள் சொல்வது சரிதான்..வகை வகையாய் சாப்பிட்டால் அதன் சுகமே தனி தான்..
என்னை பற்றி பெரிதாக சொல்லும்மளவிற்கு எதுவும் இல்லை..DCE முடிச்சுட்டு இப்போ B.S. படிச்சுட்டு இருக்கேன்.திருமணம் ஆகி விட்டது..விதவிதமாக சமைப்பது ரொம்ப பிடிக்கும்..யாராவது சமைத்து கொடுத்தால் சாப்பிட ரொம்ப பிடிக்கும் அவ்ளவுதான்..என்னை பற்றி வேற என்ன சொல்ல?

தங்களின் வருகைக்கு நன்றி..அடிக்கடி வாங்க..


அன்புடன்..,
அம்மு..

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?