
தேவையான பொருட்கள்:
***************************
நருக்கிய காய்கறிகள் - ஒன்றரை கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
புதினா,கொத்தமல்லி - ஒரு கப்
பச்சை மிளகாய் - எட்டு
பட்டை - இரண்டு
கிராம்பு - நான்கு
பிரியாணி இலை - இரண்டு
மிளகாய் தூள் - மூன்று டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
தயிர் - ஒரு கப்
அரிசி - ஒன்றரை கப்
செய்முறை:
**************
# முதலில் அரிசியை அறை மணி நேரம் ஊற வைக்கவும்.
# வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும்.
# புதினா,கொத்தமல்லி இலைகளை பொடியாக அறிந்து கொள்ளவும்.
# ஊறவைத்த அரிசியில் ஒரு பட்டை,இரண்டு கிராம்பு ஒரு பிரியாணி இலை
சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.
# ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீதம் உள்ள பட்டை,கிராம்பு,
பிரியாணி இலை சேர்த்து பொரிக்க விடவும்.
# வெங்காயம் சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.
# இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
# கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து வதக்கி மிளகாயை சேர்க்கவும்.
# பின்பு மிளகாய் தூள்,மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
# தக்காளி மற்றும் காய்கறிகளை சேர்த்து எடுத்து வைத்துள்ள தயிரில்
பாதியை சேர்த்து உப்பு மற்றும் சிறிது நீர் விட்டு அடுப்பு தணலை சிம்மில்
வைக்கவும்.
# காய்கறிகள் நன்றாக வெந்து சிறிது கிரேவியுடன் இருக்கும்
பொழுதே அடுப்பில் இருந்து எடுத்து விடவும்.
# பின்பு பிரியாணி கொள்ளும் அளவு ஒரு பாத்திரம் எடுத்து அதில் முதலில்
வெந்த சாதம் ஒரு லேயர் அதன் மேல் செய்து வைத்துள்ள கிரேவி ஒரு
லேயர் அதன் மேல் சிறிது தயிர் என்கிறவாறு எடுத்து வைக்கவும்.
# ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
# நன்கு சூடானதும் சாதம் வைத்துள்ள பத்திரத்தை எடுத்து தோசை
கல்லின்மேல் வைத்து ஒரு மூடி போட்டு மூடிவிடவும்.
#அடுப்பு தணலை சிம்மில் வைக்கவும்.
# ஒரு ஐந்து நிமிடத்தில் எடுத்து விடவும்.
#ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்த்ததும்முந்திரி தாளித்து பிரியாணியில் கொட்டவும்.
# சுவையான ஹய்த்ராபாத் வெஜிடபிள் பிரியாணி தயார்.
9 comments:
ஹும்ம்ம். ஹைதியை மருபடியும் நியாகபகப் படுத்தறீங்களே!!!
ராஜ் நீங்கள் தான் முதலில் பதிவு போட்டு பிரியாணி ஆசையை தூண்டி விட்டீர்கள் அதான் இனிக்கு செஞ்சுட்டேன்..நீங்களும் செஞ்சு பாருங்கள் அதே டேஸ்ட் கிடைக்கும்..ஒரு பதிவில் நீங்கள் "நம்மூரில் ஹைதி பிரியாணி போல் கிடைக்க மாட்டேன்குது"னு சொல்லி இருந்தீர்கள்..இந்த விதத்தில் செய்து பாருங்கள் அதே சுவை கிடைக்கும்..
அன்புடன்,
அம்மு.
எப்பொழுதும் போல அதே கலக்காலாக Presentசெய்து இருக்கின்றிங்க...அருமையான குறிப்பு..வாழ்த்துகள்.
அன்புடன்,
கீதா ஆச்சல்
http://geethaachalrecipe.blogspot.com/
paakarthuke supera iruku! Un blog romba nalla iruku ammu
பாராட்டுக்கு ரொம்ப நன்றி கீதா அக்கா ...நல்ல குறிப்பு என்று சொல்வதோடு மட்டும் இல்லாமல் கண்டிப்பாக செய்து பாருங்கள்..I got this recipe from a chef.ரொம்ப நல்ல இருக்கும்.
//paakarthuke supera iruku! Un blog romba nalla iruku ammu//
ரொம்ப நன்றி ப்ரீத்தி..அடிக்கடி வாருங்கள்..
அன்புடன்,
அம்மு.
பிரியாணியின் படம் பார்க்கும் போதே செய்து ருசி பாத்துடனும்ன்னு ஆவல் வருதே...
கண்டிப்பா செய்து பார்க்கிறேன்..
செய்முறையும் சுலபமாய் தந்துள்ளிர்கள்.. செய்து பார்த்துட்டு வந்து கமண்ட் சொல்றேன்..
மிக்க நன்றிகள்..
அய்யோ மறந்தே போயிட்டேங்க...
பிரியாணி செய்து பார்த்தேன் முதல் முறை கொஞ்சம் இசகுபிசகா தான் வந்துச்சி... அப்புறம் நாங்க கஜினி மாதிரி வெற்றி அடையும் வரை சும்மா இருக்க மாட்டோம்ல... மீண்டும் செய்து அருமையான ருசியாய் செய்து பாராட்டும் பெற்று விட்டேன்...
நன்றிகள் நன்றிகள்... நன்றிகள்..
mmmmmmmmmmmm........ippadium oru taste iduvaraikum theriya pochae!!!!!!!!
செய்தாயிற்று நல்லாயிருக்கு
நாகு
www.tngovernmentjobs.in
Post a Comment