Wednesday, August 26, 2009

கல்யாண வீடுகளில் செய்யும் சாம்பார்


தேவையான பொருட்கள்:
======================

வெண்டைக்காய் - நான்கு
கத்தரிக்காய் - ஒன்று
முருங்கைக்காய் - மூன்று துண்டுகள்
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு.
வெல்லம் - கோலிகுண்டு அளவு (விருப்பமென்றால்)
கறிவேப்பிலை - அரு ஆர்க்
பெருங்காயம் - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்

எண்ணெய்யில் வறுப்பதற்கு:
*******************************

நல்லெண்ணெய் - ஒரு குழிகரண்டி
தனியா - ஆறு டேபிள்ஸ்பூன்
கடலை பருப்பு - மூன்று டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - ஆறு
வெந்தயம் -அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்
பெருங்காயம் - ஒரு டீஸ்பூன்

அரைத்துகொள்ள:
-----------------------
தேங்காய் துருவல் - ஒரு கப்
சிறிய தக்காளி - இரண்டு

தேங்காய் மற்றும் தக்காளியுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து மேலே வறுக்க கொடுத்துள்ள வற்றை வறுத்து எல்லாத்தையும் சேர்த்து மைய அரைத்து எடுத்து வைக்கவும்.

(பி.கு.எண்ணெய்யில் வறுத்த பொருட்களை அரைக்க சேர்க்கும் பொழுது வறுத்த எண்ணெய்யுடன் சேர்த்தே சேர்க்க வேண்டும்.வடிகட்ட கூடாது )

வேகவைக்க:
___________

துவரம் பருப்பு - ஒரு பெரிய கப்
பாசி பருப்பு - கால் கப்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
தக்காளி - மூன்று துண்டுகள்
கறிவேப்பிலை - இரண்டு இலை

எண்ணெய் இல்லாமல் வறுத்து பொடிக்க:
..........................................................................

தனியா - இரண்டு டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்

கடைசியில் தாளிக்க:
---------------------------

தேங்காய்
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய் வற்றல் - இரண்டு
தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:
==========

* முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை போட்டு வெடிக்க விடவும்.

* நருக்கிய காய்கறிகளை போட்டு பெருங்காயம் போட்டு வதக்கவும்.

* உப்பு சேர்த்து ஒரு நிமிடம் சிம்மில் வைத்து வேக விடவும்.

* பின்பு புளியை ஒரு டம்பளர் நீரில் கரைத்து கடாயில் சேர்த்து காய்களை வேக விடவும்.

* அரைக்க வேண்டியவற்றை வறுத்து அரைக்கவும்.

* காய்கள் வெந்து புளி பச்சை வாசனை போனதும் அரைத்த விழுதை சேர்த்து குழம்பிற்கு தேவையான அளவு நீர் விட்டு கொதிக்க விடவும்.

* எல்லாம் ஒன்று சேர்ந்து கொதித்ததும் வேக வைத்துள்ள பருப்பு கலவையை நன்கு மசித்து சாம்பாரில் சேர்த்து மேலும் தேவையான் அளவு நீர் விட்டு கொதிக்க விடவும்.

* பருப்பு சேர்த்ததும் ரொம்ப நேரம் கொதிக்க விட கூடாது..இரண்டு நிமிடத்தில் தணலை அனைத்து விடவும்.விருப்பப்பட்டால் சிறிது வெல்லம் சேர்க்கவும்.(வெல்லம் சேர்க்கும் பொழுது கவனமாக மிக சிறிய துண்டு மட்டுமே சேர்க்கவும்.இல்லையென்றால் இனிப்பாகிவிடும்.)

* பின்பு தாளிக்க கொடுத்துள்ளவற்றை வேறு பாத்திரத்தில் தாளித்து சாம்பாரில் சேர்க்கவும்.

* எண்ணெய் இல்லாமல் வறுக்க கொடுத்துள்ளவைகளை வறுத்து நன்கு பொடித்து அதை குழம்பில் இரண்டு டீஸ்பூன் தூவி ஒரு நிமிடம் மூடி வைக்கவும்.கொத்தமல்லி தூவவும் .

* சுவையான சாம்பார் தயார்.

குறிப்பு:
======

இந்த முறையில் தான் கல்யாண வீடுகளில் மதியம் சாப்பாட்டிற்கு செய்கிறார்கள்..கொஞ்சம் அதிக வேலை தான்..ஆனால் சுவைத்து பார்க்கும் பொழுது வேலை செய்த களைப்பு காணாமல் போய்விடும்...கண்டிப்பாக ஒரு முறை இப்படி செய்து பாருங்க..
சூடான சாத்துடன் சிறிது நெய் சேர்த்து இந்த சாம்பாரை விட்டு பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்.உங்களின் கருத்தை மறக்காமல் சொல்லிட்டு போங்க..

20 comments:

sarusriraj said...

ammu nice recipie . week end i will try this. i have tagged u please visit my website

நட்புடன் ஜமால் said...

நான் ஏற்கனவே சொன்னது போல்

பிரசண்டேஷன் மிக அழகுங்க.

-------------------

எங்க வீட்டில் புளி ஊற்றாமல்

தேங்காய் பால் ஊற்றி பருப்பு ஆனம்(குழம்பு) செய்வாங்க.

எனக்கு ரொம்ப பிடிக்கும்.

முருங்கை அல்லது பெரிய அவரை போட்டு செய்வாங்க

அதை பற்றி எதுனா குறிப்பு கொடுங்களேன்

Mrs.Menagasathia said...

நிச்சயம் ஒருநாள் செய்து பார்க்கனும்.சாம்பார் குறிப்பு அருமை அம்மு!!

கீதா ஆச்சல் said...

கண்டிப்பாக படிக்கும் பொழுது செய்து பார்க்க ஆசையாக இருக்கின்றது...இந்த வாரம் செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன் அம்மு...

குறிப்புக்கு நன்றி.

Chitra said...

Hello ammu , thanks for trying out my oats kozhukkatai..nice u have a blog in tamil..this sambhar looks really yumm..have bookmarked it..will try & let u know..unga blog romabave superaa irukku :)

En Samaiyal said...

Oru naal kandepa sayithu paarkeerayen pa..... romba vithaasam maa nalla eruku.....

Pavithra said...

Nice one dear... looks so good and drooling.. rice and sambar wow wonderful .

Ammu Madhu said...

சாரு நன்றி..கண்டிப்பாக செய்து பாருங்கள் நன்றாக இருக்கும்.வருகைக்கு நன்றி.அடிக்கடி வாங்க..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

//பிரசண்டேஷன் மிக அழகுங்க.//

ரொம்ப நன்றிங்க..

கண்டிப்பாக இந்த வார இறுதிக்குள் பருப்பானம் குறிப்பு கொடுக்கிறேன்..

உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..அடிக்கடி வாங்க..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

பாராட்டுக்கு ரொம்ப ரொம்ப நன்றி மேனகா..கண்டிப்பாக செய்து பாருங்கள்..

வருகைக்கு நன்றி..அடிக்கடி வாங்க..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

வாங்க கீதா அக்கா..கண்டிப்பாக செய்து பாருங்க..நன்றாக இருக்கும்..

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..அடிக்கடி வாங்க..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

சித்ரா உங்களின் வருகை குறித்து மிக்க மகிழ்ச்சி.கண்டிப்பாக செய்து பாருங்கள்..

வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி..அடிக்கடி வாங்க..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

ப்ரியா கண்டிப்பாக செய்து பாருங்கள்..நன்றாக இருக்கும்..

வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி..அடிக்கடி வாங்க..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

பவித்ரா பாராட்டுக்கு நன்றி.. கண்டிப்பாக செய்து பாருங்கள்..நன்றாக இருக்கும்..

வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி..அடிக்கடி வாங்க..

அன்புடன்,
அம்மு.

Anu said...

Ammu very nice recipe.. Nan try panitu soluran yepadi vanthathunu...

Sorry I am not feeling well athanala i dint update the award that you gave to me.. Will post soon.......

Mythreyi Dilip said...

Aenakku migavum piditha sambhar, ruchiyaga ullathu...

Jaleela said...

இது கொஞ்ச பெரிய வேலையாக தான் இருக்கு ஆனால் நான் எதற்கும் சலிக்க மாட்டேன், எல்லா காயும் இருக்கு, செய்து பார்த்து விட வேண்டியது தான், இது என் ஸ்டெப்பை விட சிறிது வேலை அதிகம்,

ஆனால் நான் வைக்கும் சாம்பார் தான் என் பையனுக்கு பிடிக்கும் ஹோட்டலை விட.. பூரிக்கும் சாம்பார் தொட்டு தான் சாப்பிடுவான்

victor said...

அதுசரி... நான் சாம்பார் வைக்கணும்னா ஒரு நாளைந்து காய்கரிகளை ஒன்னா நறுக்கி எல்லாவற்றையும் ஒன்றாக்கி குக்கர்ல வச்சி முடிச்சிடுவேன்.. ஆனா நீங்க சொல்லும் முறை கொஞ்சம் (ம்கூம்.. அதிகமாகவே) மெனெக்கெட்டு வேலை பார்த்து செய்யனும்...

ம்ம்... ருசிக்கு ஆசைபட்டால் சிரமம் பார்க்க கூடாதுதான்...

நன்றிகள்... கண்டிப்பா செய்து பார்ப்பேன்...

sowmiya said...

ammu very niceee
ammu could u say thanjavur sambar plz

Pavithra said...

Hi Ammu,

I came thru your blog by chance and I wont be so thankful for ever in my life. Your recipes are so delicious, especially the kalyana sambar, ur attention to detail, explanation, pictures are so good. Just want to say thank you and best wishes for continuing the good work.

Pavithra

add-tamilWorld United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?