Thursday, August 13, 2009

சிம்பிள் கீரை புலாவ்


தேவையான பொருட்கள்:
======================

அரிசி - ஒண்ணேகால் கப்
கீரை - அரை கப்
புதினா - அரை கப்
கொத்தமல்லி - கால் கப்
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - ஒன்று
பிரிஞ்சி இல்லை - ஒன்று
பச்சை மிளகாய் - மூன்று
வெங்காயம் - அரை கப்
தக்காளி - அரை
உப்பு - தேவையான அளவு
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - ஒரு குழிகரண்டி
சோம்பு - ஒரு டீஸ்பூன்
கசகசா - ஒரு டீஸ்பூன்

செய்முறை
:
===========

*
அரிசியை நன்றாக களைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

* வெங்காயத்தையும்,மிளகாயையும் நீளமாக நறுக்கிகொள்ளவும்.

* சோம்பையும்,கசகசாவய்யும் மிக்சியில் நன்றாக பொடித்து கொள்ளவும்.
(வறுக்க கூடாது பச்சையாக பொடிக்கவும்)

* ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை,கிராம்பு,
பிரிஞ்சி இலை போட்டு பொரிக்க விடவும்.

* பின்பு பொடித்த பொடியை போட்டு பொரிந்ததும் பச்சை
மிளகாய்,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* லேசாக வதங்கியதும் புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.

* உப்பு சேர்க்கவும்.

* பின்பு கீரை சேர்த்து ஒரு நிமிடம் தணலை குறைத்து வைத்து வதக்கவும்.

* ஊறவைத்த அரிசியை தண்ணீரை வடித்து அரிசியை மட்டும் வதக்கிய
கலவையில் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

* பின்பு தக்காளி சேர்த்து மூன்று கப் நீர் சேர்த்து வேக விடவும்.

* நன்கு வெந்ததும் எடுத்து தேவையானால் அரை மூடி எலுமிச்சம்பழம்
பிழிந்து பரிமாறவும்.

* சுவையான சத்தான கீரை புலாவ் தயார்.

* இதை பற்றி உங்களின் கருத்தை தெரியப்படுத்துங்கள்.

9 comments:

Pavithra said...

Kovil gopuram arumaiyaga irukirathu.. keerai pulao great recipe.

குறை ஒன்றும் இல்லை !!! said...

செய்யரது சிம்ப்ளா இருந்தாலும், உங்க அலங்காரம் அருமைங்க !!!!

Mrs.Menagasathia said...

டெகரேஷன் சூப்பர் அம்மு!!

கீதா ஆச்சல் said...

எப்பொழுதும் போல Presentation Superb...

Keep it up...Good job...and creativity...

கீதா ஆச்சல் said...
This comment has been removed by the author.
Mythreyi Dilip said...

Ruchiyana recipe, Presentation romba azhaga, arumaiya irruku. Vazhthukkal!

Ammu Madhu said...

//Kovil gopuram arumaiyaga irukirathu.. keerai pulao great recipe.//

பாராட்டிற்கு நன்றி பவித்ரா..தொடர்ந்து வாங்க..

//செய்யரது சிம்ப்ளா இருந்தாலும், உங்க அலங்காரம் அருமைங்க !!!!//

நன்றி ராஜ்..தொடர்ந்து வாங்க..

//டெகரேஷன் சூப்பர் அம்மு!!//

ரொம்ப நன்றி மேனகா..தொடர்ந்து வாங்க..

//எப்பொழுதும் போல Presentation Superb...

Keep it up...Good job...and creativity..//

நன்றி கீதா அக்கா..தொடர்ந்து வாங்க..

//Ruchiyana recipe, Presentation romba azhaga, arumaiya irruku. Vazhthukkal!//

நன்றி மைத்ரேயி..தொடர்ந்து வாங்க..

அன்புடன்,
அம்மு.

Nithya said...

Kalakareenga.. arrangement super..

Ammu Madhu said...

தேங்க்ஸ் நித்யா..வருகைக்கு நன்றி அடிக்கடி வாங்க..

அன்புடன்,
அம்மு.

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?