Wednesday, August 5, 2009

கொத்து சில்லி தோசை


தேவையான பொருட்கள்:
****************************
தோசை மாவிற்கு:(தோசை மாவு அரைத்தது இருந்தால் அதையே
============== பயன்படுத்தலாம்)

மைதா - ஒரு கப்
அரிசி மாவு - அரை கப்
கோதுமை மாவு - அரை கப்
சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - கரைப்பதற்கு

மசாலாவிற்கு:
***************

வெங்காயம் - ஒன்று
தக்காளி - இரண்டு (பெரியதாக இருந்தால் ஒன்று போதும்)
பச்சை மிளகாய் - மூன்று(பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - ஒரு கப்
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
சீராக தூள் - ஒன்றரை டீஸ்பூன்
மல்லி தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
லெமன் ஜூஸ் - ஒரு துளி
உப்பு - தேவையான அளவு

பரிமாறும் பொழுது தேவையானது:
**************************************

வெங்காயம் - ஒன்று
கொத்தமல்லி - சிறிது
லெமன் ஜூஸ் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:
===========

# மேலே தோசைக்கு கொடுத்துள்ளவற்றை தோசை மாவு பதத்திற்கு
கரைத்து வைத்து கொள்ளவும்.

# தோசைக்கல்லை சூடேற்றி மெல்லிய தோசைகளாக பண்ணி எடுத்து
ஆறியதும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

# ஒரு கடையில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் போட்டு
பொன்னிறமானதும் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை
போகும் வரை வதக்கவும்.

# பச்சை மிளகாய்,கொத்தமல்லி சேர்த்து தக்காளி சேர்க்கவும்.

# தணலை மீடியம்மில் வைத்து தக்காளி கரையும்(எண்ணெய் பிரியும்)
வரை வதக்கவும்.

# பின்பு எல்லா தூள்களையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.(தண்ணீர்
சேர்க்க கூடாது..முதலிலேயே அதற்க்கு தேவையான அளவு எண்ணெய்
ஊற்றி கொள்ளவும்).

# நறுக்கி வைத்துள்ள தோசைகளை இந்த கலவையில் போட்டு எல்லாம்
ஒன்று சேருமாறு கிளறி இறக்கவும்.

# சுவையான கொத்து சில்லி தோசை ரெடி.

# பரிமாறுவதற்கு முன்பு ஒரு வெங்காயத்தை விருப்பப்பட்ட வடிவில்
வெட்டி அதில் கொத்தமல்லி,எலுமிச்சை சாரை ஊற்றி பத்து நிமிடம் ஊற
வைத்து அதை கொத்து சில்லி தோசையின் மேல் தூவியோ அல்லது
பக்கத்தில் அலங்கரித்தோ தர வேண்டும்..

# இந்த வெங்காயம் தோசையுடன் சேரும் பொழுது சுவை ரொம்ப நன்றாக
இருக்கும்.

# செய்து பார்த்து விட்டு கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.

8 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

கலக்குங்க் அம்மு.. என்னண்ணமோ செஞ்சு அசத்தறீங்க..

Mythreyi Dilip said...

Really different! Udanae seithu parpane:)

Ammu Madhu said...

பாராட்டுக்கு ரொம்ப நன்றி ராஜ் ...கண்டிப்பாக செய்து பாருங்கள்..வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ..அடிக்கடி வாருங்கள்..

//Really different! Udanae seithu parpane:)//

செய்து பாருங்கள் மைத்ரேயி...நன்றாக இருக்கும்..செய்து பார்த்துவிட்டு கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்..வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ..அடிக்கடி வாருங்கள்..

அன்புடன்,
அம்மு.

savitha said...

அம்மு..அம்மு..அம்மு..உங்களோட ஒரே அக்கப்போரா போச்சி..ஒவ்வொரு ரெசிபியும் பார்த்தும் சாப்பிட தூண்டுதுயா..உங்க ரெசிபி பாத்தா உடனே அத செய்யாட்டி எனக்கு வேலை ஓட மாட்டேன் என்கிறது ..உங்களுடைய எல்லா ஐடம்ச்சும் சூப்பர்..சூப்பர்..சூப்பர்.என்னுடைய பேவரைட் கடலைமா சட்டினி,பிஸ்ஸா,பிரியாணி,எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு ம்ம்ம்ம்ம்ம்ம்....யம்மி இப்டி சொளிட்டே போலாம்...

ரொம்ப நால்லா பாத்துக்கிட்டு இருக்கிறேன் உங்க தளத்த.இனிக்கி தான் பதில் போட முடிஞ்சுச்சுபா ..

எனக்கு ஒரே ஒரு கோவம் உங்க மேல..நீங்க எப்டி பர்சன்ட் பண்றதுன்னு எனக்கு சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டீங்க..:'(

நீங்க கொடுக்கின்ற ரெசிப்பியை என் வீட்டில் செய்து என் கணவர் என்னை பாராட்டும் பொழுது நானே கண்டுபிடித்ததாக சொளிவிடுவேன்:)நம்பிடுவார்ருங்க...

Ammu Madhu said...

//அம்மு..அம்மு..அம்மு..உங்களோட ஒரே அக்கப்போரா போச்சி.ஒவ்வொரு ரெசிபியும் பார்த்தும் சாப்பிட தூண்டுதுயா..kkkkkkk //

ஏங்க சவிதா பாராட்றீங்களா?திட்றேங்களா?
//உங்களுடைய எல்லா ஐடம்ச்சும் சூப்பர்..சூப்பர்..சூப்பர்//

நன்றி..நன்றி..நன்றி..

//எனக்கு ஒரே ஒரு கோவம் உங்க மேல..நீங்க எப்டி பர்சன்ட் பண்றதுன்னு எனக்கு சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டீங்க..:'(//

:-)

//நீங்க கொடுக்கின்ற ரெசிப்பியை என் வீட்டில் செய்து என் கணவர் என்னை பாராட்டும் பொழுது நானே கண்டுபிடித்ததாக சொளிவிடுவேன்:)நம்பிடுவார்ருங்க...//

அடக்கடவுளே!!இப்படி எல்லாம் நடக்குதே!!சவிதா உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் குறிப்பு உங்கள் மெயில் தேடி வந்து கொண்டே இருக்குது..அதையும் உங்க ஹஸ்கு செய்து கொடுங்கள்.

இதுவரை எனக்கு வந்த பின்னூட்டங்களிலேயே இது தான் ரொம்ப நீளம்:)

உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..அடிக்கடி வாங்க..

அன்புடன்,
அம்மு.

gayathri said...

அம்முமா இந்த கொத்து தோசை இன்று செய்தேன்.ரொம்ப அருமை.எக்சலன்ட்டா இருந்துச்சுப்பா.இந்தாங்க புடிங்க மோதரத்தை சமைக்க சொல்லி தந்த கைக்கு.
பி.கு.மோதரம் பார்ஷள்ள வந்துட்டு இருக்கு.

நிதி said...

அம்மு உங்களுடைய ரெசிப்பி பிரசண்டஷன் பார்க்க கண் கோடி வேணும்.

Suvaiyaana Suvai said...

nallaa irukku try panRen
http://susricreations.blogspot.com

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?