Friday, August 28, 2009

பீன்ஸ் ப்ரொகொலி புதினா துவையல்

தேவையான பொருட்கள்:
======================
பீன்ஸ் - ஐந்து
பிரொக்கோலி - கால் கப்
புதினா - ஒன்றரை கப்
கடலை பருப்பு - ஐந்து டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - மூன்று டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் - ஒன்று
மிளகாய் வற்றல் - ஐந்து
பச்சை மிளகாய் - ஒன்று
நல்லெண்ணெய் - ஒரு குழிகரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
சீரகம் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:
===========

@ முதலில் பிரொக்கோலி மற்றும் பீன்ஸ்சை மிக பொடியாக நறுக்கி
கொள்ளவும்.

@ ஒரு பாத்திரத்தில் நருக்கிய காய்களை போட்டு மூழ்கும் அளவு நீர்
விட்டு வேக வைத்துக்கொள்ளவும்.

@ ஒரு கடையில் பாதி எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடலை பருப்பு ,
உளுத்தம் பருப்பு போட்டு சிவக்க வறுக்கவும்.

@ வறுபட்டதும் மிளகாய் வற்றல் சேர்த்து வறுத்து வெங்காயம் ,பாதி
கறிவேப்பிலை சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.

@ வாணலியில் இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்
புதினா இலைகளை சேர்த்து நன்கு வதக்கவும்.

@ புதினா இலைகள் வதங்கியதும் வறுத்து வைத்த பருப்புகளுடன் சேர்த்து
ஆறியதும் உப்பு மற்றும் மல்லி இலைகளை சேர்த்து நன்கு
அரைத்துக்கொள்ளவும்.

@ வெந்த காய்களை வடிகட்டி ஒன்றும் பாதியுமாக மசித்துக்கொள்ளவும்.

@ ஒரு கடையில் மீதம் இருக்கும் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து
கறிவேப்பிலை சேர்த்து வெடிக்க விடவும்.

@ பின்பு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி மசித்த காய்களை சேர்த்து
ஒரு பின்ச் உப்பு சேர்த்து ஒரு மூன்று நிமிடம் சிம்மில் வைத்து
வதக்கவும்.

@ வதங்கியதும் அரைத்ததை காய்களில் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி
எடுக்கவும்.

@ சுவையான சத்தான துவையல் தயார்.

இந்த துவையலினை சிறுவர்களுக்கு அடிக்கடி செய்து கொடுத்தால் வயிற்றில் எந்த கோளாறும் வராமல் பார்த்துக்கொள்ளும்..முக்கியமாக பிரொக்கோலி மூளையை கூர்மையாக வைத்துக்கொள்ள உதவுகிறதாம்..
பீன்ஸ் மற்றும் பிரொக்கோலி பொரியலாக செய்தால் சில பேருக்கு பிடிக்காது அவர்களுக்கு இந்த முறையில் செய்து கொடுத்தால் மிக சுவையாக இருக்கும்..விரும்பி சாப்பிடுவார்கள் ..

இத்தனை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்..பக்க உணவாக கோஸ் கூட்டு நன்றாக இருக்கும்.

இதை பற்றிய உங்களின் கருத்தை மறக்காமல் சொல்லிட்டு போங்க..

19 comments:

Anu said...

Very different and nice recipe.... By the way your new template is looking good...

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஏங்க இந்த ஃப்ரோகொலி இங்கே கிடைக்குமா?

குட்டி பிரபு said...

பாக்குறதுக்கு நல்லா இருக்கு. செஞ்சு பாப்போம்.

கீதா ஆச்சல் said...

அம்மு, புது template அழகாக இருக்கின்றது...கலக்குறிங்க...

Mrs.Menagasathia said...

டெம்ப்ளேட்+ குறிப்பு ரொம்ப நல்லாயிருக்கு அம்மு!!

நட்புடன் ஜமால் said...

ஆஹா! நானே சொல்லவிருந்தேன் டெம்ப்ளேட் மாற்றம் அருமை.

துவையல் மேட்டர் தூள்

தங்கமணி வரட்டும் செய்து சாப்பிட்டு விடுவோம்.

sakthi said...

உங்க வீட்டில் இருப்பவர்கள் குடுத்து வைத்தவங்கபா

இங்கன்ம்

வீட்டுப்புறா

சக்தி

Sanghi said...

Ammu.. romba nallaaruku unga blog. Broccoli try pannadhe ille. ippo unga recipe try pannuven. First time here,i'm following you. En blog paarunga :)

Ammu Madhu said...

ரொம்ப நன்றி அனு..கண்டிப்பா செய்து பாருங்க..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

ராஜ் நீங்க எந்த ஊர்?சென்னைனா எல்லா சூப்பர் மார்க்கெட்டுகளிலும் கிடைப்பதாக கேள்வி...

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

கண்டிப்பா செஞ்சு பாருங்க பிரபு..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

ரொம்ப நன்றி கீதா அக்கா..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

ரொம்ப நன்றி மேனகா ..கண்டிப்பாக செய்து பாருங்க..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

ரொம்ப நன்றி ஜமால் ..கண்டிப்பாக செய்து பாருங்க..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

ரொம்ப நன்றி ஷக்தி ..கண்டிப்பாக செய்து பாருங்க..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

ரொம்ப நன்றி சங்கி ..கண்டிப்பாக செய்து பாருங்க..உங்க ப்ளாக் பார்த்தேன்..நல்லா இருக்கு...ஒரு கமென்ட் கொடுத்துள்ளேன்..பாருங்க..அடிக்கடி வாங்க ..

அன்புடன்,
அம்மு.

subha said...

I've one doubt..
That is how பிரொக்கோலி will be...
Where can v get it
How it's shape is Plz tell me...

subha said...

பிரொக்கோலி is a fruit or anything..
where v can get பிரொக்கோலி ...

Ammu Madhu said...

Its a vegetable.google imagela poi paarunga subha ungalukku naraya images kidaikkum.brocolli nu pottu search pannunga.cauliflower maari green colourla irukkum.

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?