Monday, August 31, 2009

கருப்பட்டி பொங்கல்


தேவையான பொருட்கள்:
======================

கருப்பட்டி
தூள் - ஒரு கப்
அரிசி
- ஒரு கப்
பால் - மூன்று கப்
தண்ணீர் - மூன்று கப்
நெய் - கால் கப்
ஏலக்காய்
பொடி - கால் டீஸ்பூன்
முந்திரி
- நான்கு
உலர்
திராட்சை - ஒரு டீஸ்பூன்
பாதாம் - நான்கு(விருப்பப்பட்டால்)
பிஸ்தா - ஒரு டீஸ்பூன்(விருப்பபட்டால்)

செய்முறை:
==========

* முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் இரண்டு கப் பால் மற்றும் அரிசி சேர்த்து நன்றாக வேக விடவும்.

* இன்னொரு பாத்திரத்தில் கருப்பட்டி தூள் சேர்த்து கால் கப் தண்ணீர் சேர்த்து தணலை சிம்மில் வைத்து கம்பி பாகு காய்ச்சி கொள்ளவும்.(சாதம் லேசாக வேக ஆரமித்ததும் பாகு காய்ச்ச ஆரமித்தால் போதும்..பாகு ஆனவுடனேயே சாதத்தில் சேர்த்து கிளறனும் இல்லாவிட்டால் பாகு இருக்கிப்போய்விடும்..)

* பாத்திரத்தில் வேக வைத்த அரிசியை அடிக்கடி கிளறி விடவும்.

*
பாலும் தண்ணீரும் வற்றியவுடன் காய்சிய பாகை சேர்த்து நன்கு கிளறவும்.

*
மீதம் உள்ள ஒரு கப் பாலையும் சேர்த்து நன்கு கிளறவும்.

* கொதிக்க ஆரமிக்கும்.

* எடுத்து வைத்துள்ள நெய்யை பாதி பாதியாக சேர்த்து கிளறவும்.

*
எல்லாம் நன்றாக சேர்ந்து பொங்கல் பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்.

* முந்திரி திராட்சை யை சேர்த்து கிளறவும்.

* பாதாம் மற்றும் பிஸ்தாவை துருவி சேர்க்கவும்.

* சுவையான கருப்பட்டி பொங்கல் தயார்.


குறிப்பு:
==========

பாகு சரியான பதம் வருவதற்கு எழு முதல் பத்து நிமிடங்கள் வரை ஆகும்.
(
சிம்மில் மட்டுமே வைக்கவும்)

கருப்பட்டி
சேர்த்து செய்வதால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் கொடுக்கலாம்.

நெய் வேண்டுமானால் அதிகமாக சேர்த்து கொள்ளலாம்.

இதை
பற்றிய உங்களின் கருத்துகளை மறக்காமல் சொல்லிட்டு போங்க..

21 comments:

கீதா ஆச்சல் said...

கருப்பட்டி பொங்கல் அருமை...

கருப்பட்டியினை வாங்கி வைத்து இருக்கின்றேன்...செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்..

நட்புடன் ஜமால் said...

கருப்பட்டி-யெல்லாம் பல மக்கள் மறந்துட்டாங்க

என்னா சுவை என்னா சுவை.

மிக்க நன்றிங்கோ ...

குறை ஒன்றும் இல்லை !!! said...

நன்றி அம்மு... இன்னிக்கு எனக்கு ஒரு ஸ்பெஷல் .அதுக்கு இத ட்ரீட்டா எடுத்துக்கிறேன்!! நன்றி..

Sanghi said...

Karupatti pongal, pudhusa iruku. Photo looks lovely. Na kandippa try panren. 1st pointla arisi vaarthaya poda marandhutinga. Arisiyai thanni, paaludan vega vaikanum illeya??! Maathidunga!:)

sarusriraj said...

வித்யாசமான பொங்கல் அருமை

யோ வாய்ஸ் said...

வாவ் பொங்கல், அதுவும் கருப்பட்டி பொங்கல் நினைக்கையில் ரொம்ப ஆசையாயிருக்கு. நாங்க பாடசாலை காலத்தில நவராத்திரிக்கு சக மாணவர்களோடு சேர்ந்து கருப்பட்டி பொங்கல் செய்வோம். அப்படி ஒரு ருசி அதில் இருந்தது.

S.A. நவாஸுதீன் said...

ஆஹா. சின்ன வயசுல கருப்பட்டியும் கடுங்காப்பியும் ரொம்ப இஷ்டம்.

பொங்கல் ஊருக்கு வந்ததுதான் செய்து பார்க்கணும்

En Samaiyal said...

Karupati Pongal vithaasama nalla eruku......enga karupati naan vaainga vey illai .....will buy & try this....

Ammu Madhu said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கீதா அக்கா..கண்டிப்பாக செய்து பாருங்க..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிஜமால்..ஆமாம் நறைய பேர் மறந்துட்டாங்க..எனக்கு கருப்பட்டி ரொம்ப பிடிக்கும்...கண்டிப்பாக செய்து பாருங்க..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

கண்டிப்பாக அந்த ச்பெஷல்லுக்கு என்னோடைய டிரீட்டா வச்சுகோங்க..வாழ்த்துக்கள்..

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ராஜ்..அடிக்கடி வாங்க..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

எங்க அம்மாவும் மாமியாரும் அடிக்கடி கருப்பட்டி பொங்கல் வீட்டில் செய்வாங்க.அவுங்க கிட்டேந்து கற்றுக்கொண்டதுதான்..

ஆமாம் எப்படியோ அரிசி விடுபட்டு விட்டது..இப்பொழுது சேர்த்துட்டேன்..

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சங்கி ..அடிக்கடி வாங்க..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

நன்றி சாரு..கண்டிப்பா செய்து பாருங்க..

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சாரு ..அடிக்கடி வாங்க..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

நன்றி யோ ..கண்டிப்பா செய்து பாருங்க..இதிலும் சுவை சூப்பரா இருக்கும்..

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி யோ ..அடிக்கடி வாங்க..

//நாங்க பாடசாலை காலத்தில நவராத்திரிக்கு சக மாணவர்களோடு சேர்ந்து கருப்பட்டி பொங்கல் செய்வோம். //

எனக்கு கல்யாணத்திற்கு முன்பு சமையல் அறை பக்கம் போன பழக்கமே இல்லை..நவராத்திரி கோலுக்கு அம்மா செய்வாங்க..சாப்பிட பிடிக்கும்:)

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

நன்றி ப்ரியா ..கண்டிப்பா செய்து பாருங்க..

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ப்ரியா ..அடிக்கடி வாங்க..



அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

//சின்ன வயசுல கருப்பட்டியும் கடுங்காப்பியும் ரொம்ப இஷ்டம்.

பொங்கல் ஊருக்கு வந்ததுதான் செய்து பார்க்கணும்//

எனக்கும் கடுங்காப்பி எண்டால் ரொம்ப பிடிக்கும்..கருப்பட்டியும் ரொம்ப பிடிக்கும்..கண்டிப்பாக செய்து பாருங்க நிவாஸ்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...அடிக்கடி வாங்க..

அன்புடன்,
அம்மு.

Priya said...

Karupattila pongal supera irruku Ammu, unga blog supera irruku, neegha dishesaa present pannura murai sema creativeaa irruku...

Pavithra said...

Wow looks so good and healthy one .. kadippa try panren.. decor is really good ammu

Ammu Madhu said...

ரொம்ப நன்றி ப்ரியா..வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..அடிக்கடி வாங்க ப்ரியா..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

ரொம்ப நன்றி பவி...கண்டிப்பா செஞ்சு பாருங்க..

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..தொடர்ந்து வாங்க..

அன்புடன்,
அம்மு.

param said...

கருப்பட்டி என்றால் என்ன. அது எப்படி இருக்கும்.தயவு செய்து காட்ட முடியுமா

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?