Wednesday, August 5, 2009

மங்களூர் போண்டா


தேவையான பொருட்கள்:
*****************************

மைதா - ஒரு கப்
அரிசி மாவு - கால் கப்
குக்கிங் சோடா - மூன்று சிட்டிகை
பச்சை மிளகாய் - இரண்டு(காரத்திர்க்கேர்ப்ப)
கொத்தமல்லி,கறிவேப்பிலை - மூன்று டீஸ்பூன்(பொடியாக நறுக்கியது)
துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
தேங்காய் சில் - ஒரு டீஸ்பூன்(தேவைப்பட்டால்)
தயிர் - ஒரு கப்
எண்ணெய் - பொரிப்பதற்கு
உப்பு - தேவையான பொருட்கள்

செய்முறை:
**************

# மேலே கொடுத்துள்ள பொருட்களில் எண்ணெய் தவிர மீதி பொருட்களை
எல்லாம் தோசை மாவு பதத்திற்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.

# ஒரு அரை மணி நேரம் ஊற விடவும்.(குறைந்தது கால் மணி நேரமாவது )

# எண்ணெயை மிதமான தீயில் சூடாக்கி கலந்து வைத்துள்ள கலவையை
போண்டா போல் போட்டு பொரித்தெடுக்கவும்.

# சுவையான மங்களூர் போண்டா ரெடி.

# இதற்க்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்டினி சூப்பர் காம்பினேஷன்.

21 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஹும்ம்ம்ம். கலக்குங்க..

வால்பையன் said...

எல்லாம் சரி,
இந்த போண்டாகுள்ள மங்களூர் இருக்குமா!?

Mythreyi Dilip said...

Ammu "Manglore bonda" romba nalla, ruchiya irrukuinga!

கீதா ஆச்சல் said...

எனக்கு எந்த போண்டாவாக இருந்தாலும் பிடிக்கும்..பார்ப்போம் டயட் முடியட்டம்...அப்புறம் உங்கள் சமையல் பக்கம் வந்து ஒரு புடுபுடிக்க வேண்டியது தான்...ஹா...ஹா...ஹா....

வால்பையன்...ரொம்ப தான் வாலு நீங்க...

Saranya.V said...

இந்த போண்டா ரொம்ப வித்யாசமா இருக்கு!

Ammu Madhu said...

பாராட்டிற்கு நன்றி ராஜ்.கண்டிப்பாக செய்து பாருங்கள்..தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

வால் பையன் ரொம்ப வால் பண்ணாம .கண்டிப்பாக செய்து பாருங்கள்..தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

மைத்ரேயி உங்கள் வருகை குறித்து மிக்க மகிழ்ச்சி..பாராட்டிற்கு நன்றி..கண்டிப்பாக செய்து பாருங்கள்..தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

கீதா அக்கா எனக்கும் எல்லா வெஜ் போண்டாக்களும் ரொம்ப பிடிக்கும்..ஆனா இது என்னோட பேவரைட்..கண்டிப்பாக செய்து பாருங்கள் டையட் முடிந்ததும் ..
//வால்பையன்...ரொம்ப தான் வாலு நீங்க...//

ஆமா கீதாக்கா..சரியா சொன்னீங்க :-)

உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

வித்தியாசமாக மட்டும் இல்லாமல் மிக சுவையாக இருக்கும்.கண்டிப்பாக செய்து பாருங்கள் சரண்யா..

உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

அன்புடன்,
அம்மு.

சரவணகுமரன் said...

ஆமாம், இதையெல்லாம் நீங்க எழுதுறதுக்கு முன்னாடி, வீட்டுல செஞ்சு பார்ப்பீங்கல்ல? குடுத்து வைச்சவுங்க, உங்க வீட்டுல உள்ளவங்க... :-)

Ammu Madhu said...

//ஆமாம், இதையெல்லாம் நீங்க எழுதுறதுக்கு முன்னாடி, வீட்டுல செஞ்சு பார்ப்பீங்கல்ல? //

ஆமாம் நான் செய்து பார்த்து விட்டு தான் கொடுப்பேன்...

//குடுத்து வைச்சவுங்க, உங்க வீட்டுல உள்ளவங்க... :-)//

ரொம்ப நன்றி சரவணன்.நீங்களும் வீட்டில் செய்து பார்த்துவிட்டு கருத்தை சொல்லுங்கள்.

உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.அடிக்கடி வாருங்கள்..

அன்புடன்,
அம்மு.

சாய்ஷர்மி said...

அம்மு முதலில் இவ்வாளவு ருசியா சமைக்க கற்று கொடுப்பதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.உங்க வீட்டுக்கு வந்தா சாப்பிட்டுக்கிட்டே இருக்கலாம்ல?நீங்க இவ்வழு அழகா இவ்வளவு ருசியா சமைச்சு குடுத்தா அட்ரா சக்க..அட்ரா சக்க...நாள் புல்லா சாப்ட்டுகிடே இருக்கலாம்.
உங்க வீட்ல இருக்கற வங்கள நினைத்தால் பொறாமையா இருக்கு அம்மு.
Lucky Peoples.
உங்களுக்கு என் பாராட்டுக்கள்.ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன் ரிப்ளை பண்ணுங்க.இனிக்கி போன் பண்றேன்.

நட்புடன்,
சாய்ஷர்மி

Ammu Madhu said...

சாய் தாங்க்ஸ்டி..சுவீட் சர்ப்ரைஸ் உன்னுடைய கமெண்ட்டை பார்த்தும்.
//இவ்வழு அழகா இவ்வளவு ருசியா சமைச்சு குடுத்தா அட்ரா சக்க..அட்ரா சக்க...நாள் புல்லா சாப்ட்டுகிடே இருக்கலாம்.
உங்க வீட்ல இருக்கற வங்கள நினைத்தால் பொறாமையா இருக்கு அம்மு//

நீ எதுக்குடா பொறாம படர நீயும் வீட்டுக்கு வா உனக்கும் பண்ணி தந்துட்டா போச்சு..
//உங்களுக்கு என் பாராட்டுக்கள்.//

நன்றி.
//மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன் ரிப்ளை பண்ணுங்க.இனிக்கி போன் பண்றேன்.//
பண்ணிட்டேன்..நீ கால் பண்ணு வீட்டுல தான் இருப்பேன்.இரண்டு மணிக்கு மேல் பண்ணு.

உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..அடிக்கடி வாங்க மேடம் ;)

அன்புடன்,
அம்மு.

Pavithra said...

First time to your blog.. really happy to see the recipes in Tamil and you have wonderful collection of recipes. Mangalore bonda is looking so good and crispy. The keerai chutney in the parrot form is really great idea.. and nice clicks. Will visit often keep going .

Nithya said...

Tamizhlil azhagaaga irukum blogi paarka magilchiyaaga irukiradhu.

Bonda migavum rusiyaaga therigiradhu. Kandipaaga seidhu paarkiren. :)

Unagaladhu thalathai mudhanmurayaaga paarjiren. Migavum nandraaga irukiradhu. Meendum varuven :)

Ungalukku neram kedaikum bothu yennudaya thalathai paarungal. :)

R.Gopi said...

அம்மு....

போண்டா இங்கன இருக்கு.... மங்களூர் எங்க??

சூப்பரா இருக்கும்னு நெனைக்கறேன்... சாப்பிட்டவங்க சொன்னா, படிச்சுட்டு இங்க இருந்து ஒரு பெரிய ஏப்பம் விட்டுக்கறேன்... வேற என்ன பண்ணறது?

Jaleela said...

டியர் அம்மு மங்ளூர் போண்டா பார்க்கவே கிரிஸ்பியா தெரியுது ஆனால் தயிர் சேர்த்தால் ஷாஃப்ட் ஆகிடாதா?

புதிய டிசைன் ரொம்ப நல்ல இருக்கு, இதற்கு முன் பாகற்காய் ரெசிபியில் பதில் போட்டு இருந்தேன் ஆனால் கண்டு பிடிக்க முடியல,
எல்லா பிரஷேண்டேஷன் சூப்பர்

Ammu Madhu said...

ஜலீலா அக்கா தயிர் சேர்ப்பது மாவு உப்பி வருவதற்காகத்தான்..இந்த போண்டா அஔடர் லேயர் கிரிச்ப்பியாகவும் உள்ளே பஞ்சு போல சாப்ட்டாக இருக்கும்.அதுதான் இந்த போண்டாவின் ஸ்பெஷாலிட்டி..ஒரு முறை செய்து பாருங்க..ரொம்ப நல்லா இருக்கும்.தயிர் சேர்ப்பதால் எண்ணெயும் குடிக்காது..
உங்களின் வருகை குறித்து மகிழ்ச்சி..அடிக்கடி வாங்க..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

கோபி என்ன எல்லாரும் இப்படி கிளம்பிடீங்க?மங்களூர் போண்டானு போட்டது தப்பு போல இருக்கே:-)
//சூப்பரா இருக்கும்னு நெனைக்கறேன்... சாப்பிட்டவங்க சொன்னா, படிச்சுட்டு இங்க இருந்து ஒரு பெரிய ஏப்பம் விட்டுக்கறேன்... வேற என்ன பண்ணறது?//

என்ன இப்படி சொல்லிடீங்க?நீங்களும் கண்டிப்பா செய்து பார்க்கணும்..ரொம்ப நல்ல வரும் செய்வதும் சிம்பிள் தானே?செய்து பார்த்துட்டு சொல்லுங்க..தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்..

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கோபி அடிக்கடி வாங்க..

அன்புடன்,
அம்மு.

Jaleela said...

அம்மு வருகைக்கு நன்றி அம்மு

எண்ணை குடிக்காதுன்னு வேறு சொல்லி இருக்கீங்க கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.இதே போல் கார்ன் பிளார் சேர்த்து சிக்க‌னில் செய்வேன்.
இந்த‌ போண்டா மால‌தி அக்கா முறையில் செய்து பார்த்துள்ளேன்.


இப்ப நோன்பில் தினம் மசால் வடை, உளுந்து வடை, பஜ்ஜி, போண்டா சோமாஸ்,பகோடா இது போல் ஏதாவது ஒன்று கஞ்சிக்கு தொட்டு கொள்ள செய்வேன். ஒரு நாளைக்கு செய்தது மறுநாள் வராது.

உடனே வந்து என் பிளாக்கில் பதில் அளித்ததற்கு நன்றி நீங்களும் அடிக்கடி வந்து உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.

எனக்கு ரெசிபிகளை டிசைன் செய்து போட ஆசை ஆனால் செய்து முடிப்பதற்குள் போட்டோ எடுக்க கூட முடியவில்லை டைமும் இல்லை.

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?