Sunday, August 30, 2009

புதினா கீ ரைஸ்


தேவையான பொருட்கள்:
======================


புதினா (பொடியாக நறுக்கியது) - ஒரு கப்
நெய்
- மூன்று டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் - ஒன்று
கொத்தமல்லி
- ஒரு கைப்பிடி
சீரகம் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை
- ஒரு ஆர்க்
அரிசி
- ஒரு கப்
உப்பு
- தேவையான அளவு
பச்சை
மிளகாய் - நான்கு (காராத்திற்கு தகுந்தாற்போல் )
கிராம்பு
- ஓன்று
பட்டை - ஒரு சிறிய துண்டு
எண்ணெய்
- அரை குழிகரண்டி

செய்முறை
:
==========

*
ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் மற்றும் கறிவேப்பிலை தாளிக்கவும்.

* பட்டை கிராம்பு போட்டு பொரிய விடவும்.

* பெரிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.

*
புதினா மற்றும் மல்லி இலைகளை சேர்த்து நன்கு வதக்கி பச்சை மிளகாய் சேர்த்து சிம்மில் வைத்து ஒரு நிமிடம் வதக்கவும்.

* உப்பு மற்றும் அரிசி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி அரிசி வேக தேவையான அளவு நீர் விட்டு வடித்து எடுக்கவும்.

*
நெய் வாசனையில் வீடே மணக்கும்.

* தேவையானால் சாதம் வெந்ததும் சிறிது நெய்யில் முந்திரி தாளித்து கொட்டவும்.

*
சுவையான புதினா கீ ரைஸ் தயார்.

* இதை பற்றி உங்களின் கருத்தை மறக்காமல் சொல்லிட்டு போங்க.

15 comments:

Pavithra said...

Mmmmmmmmmmm ammu mint rice in a fish looks so creative and tempting .. nice arrangement ammu , hats off.

நட்புடன் ஜமால் said...

ஹையா தூள் தூள்

------------

இது நெஜ்செரிச்சல்-அஸிடிட்டி வருமா

யோ வாய்ஸ் said...

ஆஹா வாசிக்கையிலே வாய் ஊறுதே. எனக்கு நெய்னா ரொம்ப பிடிக்கும்.

Ammu Madhu said...

//இது நெஜ்செரிச்சல்-அஸிடிட்டி வருமா//

புரியலையே!!!

காரம்/கீ நறைய இருக்குன்னு சொல்ல வரீங்களா ஜமால்?:-) நான் கொஞ்சம் டியூப் லைட் :-)

அன்புடன்,
அம்மு..

Ammu Madhu said...

//ஆஹா வாசிக்கையிலே வாய் ஊறுதே. எனக்கு நெய்னா ரொம்ப பிடிக்கும்.//

எனக்கும் நெய்னா ரொம்ப பிடிக்கும்...கண்டிப்பா செய்து பாருங்க..

அன்புடன்,
அம்மு..

Ammu Madhu said...

ரொம்ப நன்றி பவித்ரா..கண்டிப்பா செய்து பாருங்க..

அன்புடன்,
அம்மு..

S.A. நவாஸுதீன் said...

ஆகா. ரொம்ப ஈசியா இப்படி ஒரு அருமையான சாப்பாடா. நன்றிங்க

கீதா ஆச்சல் said...

நீங்கள் அழகாக Present செய்து இருக்கின்றிங்க...Good creativity...

எப்படி அம்மு, இப்படி எல்லாம் பொருமையாக செய்கின்றிங்களோ...

அருமை...அருமை....அழகுகாக இருக்கின்றது மீன் மட்டும் அல்ல, புதினா கீ ரைஸும் தான்...

Chitra said...

superaa irukku..nalla presentation:) will surely try !

sarusriraj said...

அம்மு புதினா கீ ரைஸ் சூப்பர் , வாசனை தூக்குது. படங்களை பார்கும் போதே வாய் ஊறுது

SanjaiGandhi said...

ஆஹா.. உங்க ரெசிபி மாதிரியே டெம்ப்ளெட் அழகா இருக்கு. இனி உங்கள் ரசிகர் பட்டாளம் ஜாஸ்தியாகும். :) நட்பாய் சொன்ன ஆலோசனையை ஏற்றதற்கு. மகிழ்ச்சி.. நன்றி.

எளிமையாய் செய்றமாதிர் எதுனா ரெசிபி சொல்லுங்க அம்மு. நான் செமத்தியான சோம்பேறி. சமைக்க மைக்ரோவேவ் ஓவன் மட்டுமே இருக்கு.

குறை ஒன்றும் இல்லை !!! said...

அழகா இருக்குங்க சமையலும் டெம்ப்லேட்ட்டும்!!!

Mythreyi Dilip said...

Romba super!

சந்ரு said...

சாப்பிட்ட மாதிரியே இருக்கு

Sanghi said...

Mint rice looks yummy!

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?