Tuesday, September 1, 2009

பாகற்காய் தொக்கு


தேவையான பொருட்கள்:
======================

நருக்கிய பாகற்காய் - ஒரு கப்

மாங்காய் (துண்டுகளாக நறுக்கியது)- அரை கப்

பொடித்த வெல்லம் - மூன்று டேபிள்ஸ்பூன்

உப்பு - சிறிது

கறிவேப்பிலை - ஒரு ஆர்க்

தக்காளி - ஒன்று

பெரிய வெங்காயம் - ஒன்று

பச்சை மிளகாய் - நான்கு

நல்லெண்ணெய் - மூன்று டேபிள்ஸ்பூன்

சீரகம் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:
===========

@ ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் தாளித்து கறிவேப்பிலை போட்டு பொரிய விடனும்.

@ வெங்காயம் போட்டு வதக்கி பொன்னிறமானதும் பச்சை மிளகாய்,தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

@ உப்பு சேர்க்கவும்.

@ பாவக்காயை வேறு ஒரு பாத்திரத்தில் சிறிது உப்பு போட்டு சிறிது சிறிதாக நீர் விட்டு வேக வைக்கவும்.

@ நன்றாக வெந்ததும் நீரை பிழிந்து தக்காளி கலவையுடன் சேர்த்து நன்கு பிரட்டவும்.

@ தணலை சிம்மில் வைக்கவும்.

@ ஒரு நிமிடம் நன்றாக வதக்கி மாங்காய் சேர்த்து வதக்கவும்.

@ ஒரு நிமிடத்தில் வெல்லம் சேர்த்து கிளறி இறக்கவும்.

@ சில குழந்தைகளுக்கு பாவற்காய் பிடிக்காது அவர்களுக்கு இது போல் தொக்கு செய்து சப்பாத்தியில் தோசையில் ஸ்டப் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.குறிப்பு:
========

பாவக்காய்யினை நறுக்கியபின் மூன்று முறை உப்பு தண்ணீரில் அலசி பிழிந்து எடுத்தால் கசப்புத்தன்மை போய்விடும்.

ஒரு சில வெல்லத்தில் இனிப்பு சுவை அதிகமாக இருக்கும் அவர்கள் கொஞ்சம் கம்மியாக வெல்லம் சேர்த்தால் போதுமானது.

கடைசியில் வெல்லம் சேர்த்ததும் அதிக நேரம் கிளர வேண்டாம்.

இதில் பச்சை மிளகாய்,வெல்லம்,உப்பு ,மாங்காய் எல்லாம் சேர்ந்ததால் அனைத்து சுவையும் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

இதில் ப்ரோசன் பாவற்காய் யூஸ் பண்ணியும் செய்யலாம்.சுவை மாறாது.

இதனை பற்றிய உங்களின் கருத்துக்களை மறக்காமல் சொல்லிட்டு போங்க..

38 comments:

ஷரித்தா said...

அம்மு நீங்கள் கொடுக்கும்/கொடுத்திருக்கும் அனைத்து ரெசிப்பிக்களையும் பார்த்ததும் கண்டிப்பாக செய்து விட வேண்டும் என்று ஆர்வம் கொடுக்கிறது(எப்படி இவ்வளவு பொறுமை இருக்கிறதோ உங்களுக்கு).
பாகற்காய் என் பிள்ளைகளுக்கு பிடிக்கவே பிடிக்காது.வீட்டில் பாகற்காய் வைத்திருப்பதை பார்த்து விட்டால்.."நோ மம்மி...நோ பாவக்கா"என்று கத்த ஆரமித்து விடுவாங்க இன்று உங்க ரெசிப்பியில் படத்தை காட்டியதும் செய்ய சொல்லி விட்டாங்க..

நேரம் கிடைக்கும் பொழுது என் ப்ளாகிற்கு வாங்க..

மெயில் செய்துள்ளேன். பாருங்க.நன்றி.

---ஷரித்தா

param said...

அம்மு உங்களுக்கு என் நனறி கலந்த வனக்கம்.புது வித பாகற்காயை செய்து பார்த்தேன் .மிகவும் சுவையாக இருக்கிற்து .மிக்க நன்றி.

நட்புடன் ஜமால் said...

நல்ல ஐடியா பாகற்காய் சாப்பிட

எனக்கு பொதுவாகவே பிடிக்கும்.

யோ வாய்ஸ் said...

பாவக்காய்யினை நறுக்கியபின் மூன்று முறை உப்பு தண்ணீரில் அலசி பிழிந்து எடுத்தால் கசப்புத்தன்மை போய்விடும்.//

என் போன்ற கசப்பதால் பாவற்காய் சாப்பிடாதவர்களுக்கு இது நல்ல செய்தி.

sarusriraj said...

பார்க்க நல்லா இருக்கு அம்மு ஆனால் எனக்கு பாகற்காய் பிடிக்காது, நீங்கள் தான் ஒரு டிப்ஸ் சொல்லி இருகிங்கள். அந்த முறையில் செய்து பார்கிறேன்.

Jaleela said...

அம்மு பாகற்காயில் தொக்கு அருமையா தொக்கு போட்டு இருக்கீங்க, வெல்லம் முன்று மேசைகரண்டியா?

நான் பாகற்காயில் வெங்காயம் தக்காளி சேர்த்து கூட்டு செய்வேன் , சாம்பரில் மிக்ஸ்ட் வெஜ் போடும் போது 5 வில்லை பாகற்காயும் சேர்த்து கொள்வேன், அதன் ஜூஸ் இரங்க்னாலே போதும் நல்ல இருக்கும்.

Chitra said...

Hello ammu , pavakkai thokku super aa iruku.Naan pitlai matumea seyven,,Ithu oru nalla change :) have bookmarked it :)

D.R.Ashok said...

நீங்க சொல்ற ‘பாகற்காய் தொக்கு’ இனிக்கும் போல இருக்கே. அல்வா மாதிரியில்ல இருக்கு. நாக்கு ஊருதுங்க. :)

En Samaiyal said...

Pls collect ur Award from my Blog Dear ..
http://ennsamaiyal.blogspot.com/2009/08/beetroot-halwa.html

Geetha Achal said...

இந்த பதிவினை கொஞ்சம் பார்க்கவும்.
http://geethaachalrecipe.blogspot.com/2009/09/blog-post.html

அன்புடன்,
கீதா ஆச்சல்

மகேஷ் said...

Pakarkai ku Kathirikai alangarama? :))))))))

Shobana senthilkumar said...

Hi ammu,
pavakkai thokku super naan pavakkai varuval thaan seiven...thokku pudhusa irruku..i will try and give u my fb:)

dharshini said...

செய்து பார்க்கிறேன்.. எனக்கு பொதுவாகவே அனைத்து காய்களும் பிடிக்கும்(கோவக்காய், காலிஃப்ளவர் தவிர).. பார்ப்பதர்க்கே நன்றாக இருக்கு.

Priya said...

Ammu bittergourd thokku seems very new to me..supera irruku..kalakuringa ponga..

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஆகா... நன்றீ..

Hindu Marriages In India said...

சூப்பர்

Mrs.Menagasathia said...

pls collect ur award from my blog

samanthi said...

Hi ammu..

Unga template recipes photos ellame beautiful..unga pavakkay thoku enga vetil ellarum romba pidichi saptanga..unga bisi bele bhath .binthi masala, karuppatti pongal ellam wonderful..please collect your ' super duper chef award' from my blog..

Voila,
Samanthi.

Ammu Madhu said...

உங்களின் குழந்தைகளுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி ஷரிதா..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

உங்களுக்கு பிடித்திருந்தது குறித்து ரொம்ப மகிழ்ச்சி பரம்..வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..தொடர்ந்து வாங்க..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஜமால் ..தொடர்ந்து வாங்க..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி யோ...தொடர்ந்து வாங்க..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சாரு ..நான் solli இருக்கும் முறைப்படி செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்..தொடர்ந்து வாங்க..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஜலீலா அக்கா ..ஆமாம் வெல்லம்சுவை கொஞ்சம் தூக்கலாக இருந்தால் தான் இதன் சுவை கூடும்...தொடர்ந்து வாங்க..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சித்ரா ..கண்டிப்பாக செய்து பாருங்கள்.....தொடர்ந்து வாங்க..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அசோக் ...அமாம் இனிப்பாக தான் இருக்கும்...கண்டிப்பாக செய்து பாருங்கள்.....தொடர்ந்து வாங்க..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

நன்றி ப்ரியா..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

நன்றி கீதா அக்கா..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

ஏன் மகேஷ் பண்ண கூடாதா?வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..தொடர்ந்து வாங்க..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

கண்டிப்பாக செய்து பாருங்க ஷோபனா..வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..தொடர்ந்து வாங்க..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

கண்டிப்பாக செய்து பாருங்க தர்ஷினி ..வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..தொடர்ந்து வாங்க..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

செய்து பாருங்க ப்ரியா..நன்றாக இருக்கும்..வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..தொடர்ந்து வாங்க..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ராஜ் ..தொடர்ந்து வாங்க..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி இந்து மேரேஜஸ் இன் இந்தியா ..தொடர்ந்து வாங்க..

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

நன்றி மேனகா ...

அன்புடன்,
அம்மு.

Ammu Madhu said...

ரொம்ப நன்றி சாமந்தி..

அன்புடன்,
அம்மு.

Balakrishna Saraswathy said...

Hi first time in ur blog..just love this recipe very much..sorry i can read tamil but not very good in writing them,,hope u don't mind me giving comments in english...thanks for ur comments..hope u can sign in as a follower too

Anonymous said...

hm. strange thoughts )

add-tamilWorld United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?