Wednesday, September 16, 2009

ச்பிகேட்டி வித் ஹெல்த்தி பால்ஸ் (நூடுல்ஸ்சிலும் செய்யலாம்)








தேவையான பொருட்கள்:
========================
ச்பிகேட்டி செய்ய :
---------------------------
ச்பிகேட்டி - அரை பாக்கெட் (சிறியதாக இருந்தால் ஒரு பாக்கெட்)
தக்காளி - மூன்று
வெங்காயம் - இரண்டு
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
துருவிய இஞ்சி  - ஒரு டேபிள்ஸ்பூன்
துருவிய பூண்டு - இரண்டு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்
பச்சை பட்டாணி - ஒரு கப்
நருக்கிய காய்கறிகள் - ஒன்றரை கப் (பீன்ஸ் ,காரட்,கோஸ்)
பட்டார் - ஒரு டேபிள்ஸ்பூன்
கறி பௌடர் - ஒரு டீஸ்பூன்
சோம்பு பொடி - அரை டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - ஐந்து (காரத்திற்கு தகுந்தாற்போல் )
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு குழிகரண்டி

ஹெல்த்தி பால்ஸ் செய்ய :
------------------------------------------

வெந்தய கீரை - ஒரு கப்
சின்ன வெங்காயம் - ஆறு
தோல் நீக்கி பொடியாக நருக்கிய உருளை கிழங்கு - ஒரு கப்
பீன்ஸ் - அரை கப்
பொடியாக நருக்கிய காரட் - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - இரண்டு
முளைகட்டிய கொள்ளு - ஒரு கப்
பிரட் கிரம்ஸ் -  ஒரு கப்
மைதா - ஒரு கப்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - தேவையான அளவு


செய்முறை:
===========

*   ச்பிகேட்டியை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு பாத்தியம் நறைய நீர் விட்டு
     ச்பிகேட்டி கவரில்  குறிப்பிட்டுள்ள நேரம் படி சிறிது உப்பு சேர்த்து  வேக வைத்து    \    எடுக்கவும்.

*    நீரை நன்றாக வாடி கட்டி குளிர் நீரில் அலசவும்.

*    ஒரு டீஸ்பூன் எண்ணெய் எடுத்து ச்பிகேட்டியில் விட்டு அனைத்திலும் படுமாறு 
      கலக்கவும்.

*     இரண்டு  தக்காளியை தண்ணீர் விடாமல் மைய்யாக அரைத்து கொள்ளவும்.

*     பின்பு ஒரு வெங்காயத்தை தனியாக ஒரு டேபிள்ஸ்பூன் நீர் விட்டு
       ஒன்றிரண்டாக அரைத்து கொள்ளவும்.

*     அரைத்ததை தனியாக எடுத்து வைத்து விட்டு மிளகாய் வற்றல் சேர்த்து ஒரு
       டீஸ்பூன் நீர் விட்டு மைய்யாக விழுது அரைத்து கொள்ளவும்.

*      பீன்ஸ் காரட் கோஸ்சை நீளமாக மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

*      ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு பொடி போட்டு
        பொரிந்ததும் இஞ்சி,பூண்டு சேர்த்து வறுத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

*     பின்பு அரைத்து வைத்துள்ள மிளகாய் பேஸ்ட் சேர்த்து நன்கு  வதக்கவும்.

*     அரைத்த வெங்காயத்தை சேர்த்து நன்கு கிளறி பச்சை வாசனை போய்  எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

*    அரைத்த தக்காளியை சேர்த்து அதே போல் எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

*    மீதம் உள்ள நருக்கிய தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி கறி  பௌடர் சேர்த்து நன்கு கலக்கவும்.

*    இந்த கலவையை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

*    இப்பொழுது பட்டார் சேர்த்து நன்கு காய்ந்ததும் மீதம் உள்ள வெங்காயம் சேர்த்து வதக்கி நறிக்கிய காய்களை சேர்த்து பட்டாணி சேர்த்து  காய்களை ஒன்றும் பாதியுமாக வதக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து தனியாக எடுத்து  வைக்கவும்.

*    இப்பொழுது பெரிய பாத்திரத்தில் ச்பிகேட்டி சேர்த்து கரவி சேர்த்து வதக்கிய காய்களை சேர்த்து நன்றாக கலக்கவும்.எல்லாம் ஒன்று சேர்ந்ததும் உப்பு சரி பார்த்துக்கொள்ளவும்.

*    இப்பொழுது பால்ஸ் செய்து ச்பிகேட்டியுடன் சேர்த்து கலக்க வேண்டியது தான்.

*    பால்ஸ் சேர்வதற்கு ஒரு கடாயை அடுப்பில் வயத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

*    பின்பு சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி கீரை,கொள்ளு  சேர்த்து வதக்கவும்.

*    காய்கறிகள் சேர்த்து லேசாக வதங்கியதும் உப்பு சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு வேக குழைவாக வேக வைத்து எடுத்து கொள்ளவும்.

*    வெந்ததும் நீரை  வடி கட்டி விட்டு சிறிது ஆறியதும் நன்றாக பிசியவும்.

*    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பிசிந்து வைத்துள்ள கலவையை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி ஆறவிடவும்.

*    மைதாவை தோசை மாவு பதத்திற்கு சிறிது உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும்.

*     பொரிக்க தேவையான அளவு எண்ணெய்யை சூடு செய்து கொள்ளவும்.

*    ஆறியதும் வதக்கிய கலவையை சிறு சிறு பால்ஸ் செய்து மைதா கலவையில் முக்கி பிரட் கிரம்ஸ்சில் பிரட்டி எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுக்கவும்.

*    இவ்வாறு அனைத்து கலவையையும் பொரித்தேடுத்தவுடன் அதை ச்பிகேட்டியில் சேர்த்து உடையாமல் கிளறவும்.

*    சுவையான சத்தான ச்பிகேட்டி அண்ட் ஹெல்த்தி பால்ஸ் தயார்.

குறிப்பு:
=======
ச்பிகேட்டி கிடைக்காதவர்கள் இதே முறையில் நூடுல்ஸ் வைத்தும் செய்யலாம்.

இதை பற்றி உங்க கருத்தை மறக்காமல் சொல்லிட்டு போங்க.

---அம்மு.

23 comments:

Nithya said...

Wow.. super ah iruku dish and decoration adhirudhu :)

Azhaga pannitu oru photo thana... put more pics na..

Neenga kandippa en event la kalandhukanum.. kalakkanum :) Sariya

Priya said...

Spaghetti with healthy balls looks gorgeous..Pakkum pothey pasikuthu.

Balakrishna Saraswathy said...

Wow methi balls in spaghetti looks so healthy and lip smacking...the presentation of the dishes is so succulent..

kittymatti said...

supero super! recipe and presentaiton! Kalakaringa!

Nandini said...

Wow! Healthy methi balls in spaghetti looks delicious! Lovely presentation!
I have removed the word verification :)

யோ வாய்ஸ் (யோகா) said...

நன்றி

Chitra said...

Super , sphagetti illa. will try with noodles..and let u know :)

En Samaiyal said...

Romba nalla eruku Spaghetti with healthy balls...Presetation looks awesome .......thanx for trying my recipe dear ..

Ammu Madhu said...

கண்டிப்பா கலந்துக்கறேன் நித்யா..பாராட்டிற்கு நன்றிகள்..



அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

சாப்பிட வாங்க ப்ரியா..



அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி சரஸ்வதி..



அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி ப்ரீத்தி..



அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி யோ..


அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி சித்ரா ..கண்டிப்பாக செஞ்சு பாருங்க....


அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி ப்ரியா ..கண்டிப்பாக செஞ்சு பாருங்க....


அன்புடன்,

அம்மு.

priya said...

Hi ammu,

Thx for visiting my blog...unga blogum recipesum super'ah irruku...

SriLekha said...

looks too good!
do visit my blog when u find time!

Jaleela said...

அம்மு ஸ்பேகதி ரொம்ப நீளமா விளக்கி இருக்கீங்க.ந‌ல்ல‌ குறீப்பு பிள்ளைக‌ளுக்கு ரொம்ப‌ பிடித்த‌ உண‌வு.
பெயரை ஸ்பேகதி என்று போடுங்கள்.

BALAJI K said...

padangaLai paarthale naavil neer oorugirathu! migavum eLimaiyana azhagan muraiyil present paNniyirukkireergaL ! Congratulations !

Ammu Madhu said...

நன்றி ப்ரியா..



அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி ஸ்ரீலேகா ..



அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி ஜலீலா அக்கா

.....



//ஸ்பேகதி//னு பேர மாத்த சொலிருக்கீங்க.ஆனா "ஸ்பிகட்டி" ,"ஸ்பிகெட்டி","ஸ்பிகேட்டி" தான் சரியான உச்சரிப்பென்று ஒரு இத்தாலியரியம் கேட்டு தெரிந்து கொண்ட பின் தான் போட்டேன்..நன்றி..



அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி பாலாஜி

..



அன்புடன்,

அம்மு.

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?