Tuesday, September 29, 2009

கொள்ளு தோசை


தேவையான பொருட்கள்:
==========================

கொள்ளு பொடி -இரண்டு  கப்
கோதுமை மாவு - அரை கப்
மைதா - கால் கப்
அரிசி மாவு - ஒரு கப்
இஞ்சி துருவல் - இரண்டு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - நான்கு
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி 
நருக்கிய கொத்தமல்லி,கறிவேப்பிலை - மூன்று டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணெய் - தோசைக்கு விட  தேவையான அளவு 

செய்முறை:
============

* மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் நீர் விட்டு  தோசை மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.

* ஒரு பத்து நிமிடம் ஊற விடவும்.

* பின்பு தோசை கல்லை சூடேற்றி மாவை தோசைகளாக ஊற்றி சற்று சிவந்ததும் திருப்பி போட்டு சற்று மொரு மொருப்பானதும் இறக்கவும்.

* சுவையான கொள்ளு தோசை தயார்.
* தோசை செய்யும் பொழுது அடுப்பு தனை மீடியமில் வைத்து தான் செய்ய வேண்டும்.இல்லையென்றால் தோசை சரியாக வராது பிய்ந்து விடும்.


* இதற்க்கு பக்க உணவாக தக்காளி தொக்கு,தேங்காய் சட்டினி,தோசை சாம்பார் பக்க உணவாக வைத்து சாப்பிட சுவை ரொம்ப நன்றாக இருக்கும்.குழந்தைகளுக்கு என்றால் சர்க்கரை மற்றும் தோசை மிளகாய் பொடியை சேர்த்து கலந்து தோசையின் நடுவில் வைத்து ஸ்டப் செய்து கொடுக்கலாம்.
இதனை பற்றி உங்கள் கருத்துக்களை மறக்காமல் சொல்லிட்டு போங்க..


--அம்மு.

18 comments:

Chitra said...

super ammu , i'll try ..but how to make kollu podi..roast & grind ?

Nithya said...

Kollu dosai super :) Nice decoration idea too :)

Ammu Madhu said...

ஆமாம் சித்ரா..ஆனால் நான் செய்திருப்பது ரெடிமேட் பொடி வைத்து...


அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி நித்யா..


அன்புடன்,

அம்மு.

பாத்திமா ஜொஹ்ரா said...

super ammu.

Pavithra said...

Horse gram dosa looks so delicious and nice decor ammu... Just have a look at my version of horse gram dosa when u find time. Regd Tahini paste its purely ground sesame seed paste. Its so healthy and available all asian stores and super markets in asian section.

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

என்னங்க அம்மு தோசைலயெல்லாம் படம் வரைஞ்சு காண்பிக்கிறீங்க!! சூப்பர்!!

Nandini said...

Kollu dosa looks gorgeous with the drawing!

Balakrishna Saraswathy said...

Superb a different twist in enjoying all time favorite tiffin item of South India

Sangeetha Subhash said...

Lovely kollu dosai ammu, ur very creative nd nicely presented...:)

Mrs.Menagasathia said...

வழக்கம்போல் தோசை+டெகரேஷன் கலக்கல் அம்மு!!

பிரியமுடன்...வசந்த் said...

தோசை அழகா சுட்டமாதிரியே அதுமேல் சக்கரையும் அழகா தூவியிருக்கிறீர்கள்...

Geetha Achal said...

சூப்பர்ப் சத்தான தோசை...

எங்கள் வீட்லும் இதே மாதிரி தோசையினை செய்வேன்...

ஆனால் கொள்ளுவினை அரைத்து செய்வேன்..

இந்தியன் கடைகளில் இந்த கொள்ளு பொடி கிடைக்கின்றதா...

அடுத்த முறை கடைக்கு பொகும் பொழுது பார்கிறேன்..நன்றி அம்மு.

Mrs.Menagasathia said...

pls see this link

http://sashiga.blogspot.com/2009/10/blog-post.html

Padma said...

Hello Ammu... thanks for dropping by and leaving your comments... kollu dosai looks yummy and nice decoration with sugar... kids will love them... and also very healthy... perfect for winter... keep visiting.. me too will drop in often....

my kitchen said...

Kollu Dosai lokks yummy.Ur giving excellent presentation every time.Do visit my blog when u find time

சந்ரு said...

நல்ல சுவையாய் இருக்கும்போல தெரிகிறது.....

Valarmathi said...

Wow super a irukku, different dosa, healthy too.

add-tamilWorld United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?