Sunday, September 13, 2009

மணத்தக்காளி பொன்னாங்கன்னி பச்சடி




தேவையான பொருட்கள்:
========================

மணத்தக்காளி கீரை - ஒரு கைப்பிடி
பொன்னாங்கன்னி கீரை - ஒரு கைப்பிடி
காய்ந்த சுண்டைக்காய் - ஒன்று
மிதுக்க வற்றல் - ஒன்று
மோர் மிளகாய்  - இரண்டு
பச்சை மிளகாய் - ஒன்று
பூண்டு - இரண்டு
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்
நீர் மோர் - அரை டம்பளர்

செய்முறை:
===========

* ஒரு கடையில் ஒரு சொட்டு எண்ணெய் விட்டு மணத்தக்காளி கீரை மற்றும் பொன்னாங்கன்னி கீரையை இரண்டு நிமிடம் வதக்கி தேவையான அளவு நீர் விட்டு வேக வைக்கவும்.

* ஒரு கடையில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு போட்டுலேசாக வதக்கி,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

* இரண்டும் லேசா வதங்கியதும் பெருங்காயம் சேர்த்து சுண்டைக்காய் மற்றும் மிதுக்க வற்றல் ,மோர் மிளகாய்  சேர்த்து வறுத்து ஆறவிடவும்.

* பின்பு அனைத்தையும் சேர்த்து மிக்சியில் நீர் விடாமல் கொரகொரப்பாக அரைக்கவும்.

* கீரை வெந்ததும் அதை மிக்சியில் கெட்டியான  விழுதாக அரைத்தெடுக்கவும்.

* கீரை கலவையில் தேவையான அளவு உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்த கலவையை சேர்த்து கலக்கவும்.

* நீர் மோரில் உப்பு சேர்த்து அதையும் கீரை கலவையுடன் சேர்த்து கலக்கவும்.

* சுவையான சத்தான பச்சடி   தயார்.

குறிப்பு:
======

மிதுக்க வற்றல்,சுண்டைக்காய் வற்றல் பிடிக்காதவர்கள் அது இல்லாமல் செய்யலாம்.ஆனால் இரண்டும் சேர்த்தால்தான் சுவை அதிகம் இருக்கும்.நல்லெண்ணையில் வறுப்பதால் கண்டிப்பாக கசப்பு இருக்காது..

நீர் மோர் பிடிக்காதவர்கள் தயிர் சேர்த்தும் செய்யலாம்.

உங்களின் காரத்திற்கு தகுந்தாற்போல் மிளகாய் சேர்க்கவும்.


இதை பற்றி உங்களின் கருத்துகளை மறக்காமல் சொல்லிட்டு போங்க...


அம்மு.

12 comments:

பாத்திமா ஜொஹ்ரா said...

wow,very nice akka,I like it.

Jaleela said...

அம்மு சூப்பர் ரெசிபி, மனத்த்தாக்காளி வயிற்று புண்ணுக்கு ரொம்ப நல்லது.


ஆனால் இங்கு சில வகை கீரைகள் தான் கிடைக்கிறது.

Balakrishna Saraswathy said...

Very health recipe ma but I cannot find these greens here in USA :(

Mythreyi Dilip said...

Looks superb Ammu, take sometime to visit my blog too:)

geethasmbsvm6 said...

எத்தனை வருஷம் ஆச்சு, மிதுக்க வத்தல் பேரைக் கேட்டே, மதுரையிலே அதிலே குழம்பு கூட வைப்போம். சாப்பிட்டே பல வருஷங்கள் ஆகிறது. இங்கே எல்லாக் கீரையும் கிடைக்கின்றது. கடந்த இரு நாட்களாய் மணத்தக்காளிக்கீரை தான்! :D

En Samaiyal said...

Romba Nalla eruku Ammu..Ur drawing also looking Great ...keep rocking ..

Ammu Madhu said...

நன்றி பாத்திமா..



அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

பாராட்டிற்கு நன்றி ஜலீலா அக்கா..



அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி சரஸ்வதி ..



அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி மைத்ரேயி ..நீங்கள் கூப்பிட வேண்டும் என்று அவசியமே இல்லை ..நான் அடிக்கடி பார்த்துக்கொண்டு தான் இருப்பேன்..அசைவம் தான் நீங்கள் கடைசி சிறிது நாட்களாக கொடுத்தீர்கள் அதனால் தான் பின்னூட்டம் போடவில்லை..சைவ குறிப்பிற்கு பின்னூட்டம் இடுவேன்..எனக்கும் அசைவத்திற்கும் ரொம்ப தூரம்:)..



அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி கீதா ...



அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி ப்ரியா ...



அன்புடன்,

அம்மு.

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?