Tuesday, September 22, 2009

பூண்டு ரசம் (poondu soup/poondu rasam)

தேவையான பொருட்கள் :
=======================



புளி - எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் - மூன்று
ரசம் பொடி - மூன்று  டேபிள்ஸ்பூன்
தக்காளி - ஒன்று
தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன்(விருப்பபட்டால்)
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
பெருங்காயத்தூள் - ஒரு பின்ச்
பூண்டு - இருபத்திரெண்டு பல்
இஞ்சி துருவல் - ஒரு டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - ஒன்று
நல்லெண்ணெய் - இரண்டு டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
===========

*     புளியை மூன்று டம்பளர் தண்ணீரில் கலந்து கொள்ளவும்.

*     புளியில் பச்சை மிளகாய்,மஞ்சள் தூள்,பாதி கறிவேப்பிலை,தக்காளி,நல்லெண்ணெய்
       சிறிது உப்பு  சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைக்கவும்.

*     நன்கு கொதித்து பச்சை வாசனை போனதும் ரசம் பொடி சேர்த்து மூன்று நிமிடம்
       கொதிக்க விடவும்.

*     பின்பு தேவையான அளவு நீர் விட்டு கொத்தமல்லி,உப்பு  சேர்த்து கொதிக்க விடவும்.




*     வேறு ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி காய வைத்து
       பூண்டு,இஞ்சி,மிளகாய் வற்றல்,கறிவேப்பிலை,சீரகம்,தேங்காய் 
       துருவல்,பெருங்காயதூள் சேர்த்து பூண்டு சிவக்கும் வரை வறுத்து ரசத்தில் 
       சேர்க்கவும்.

                                                     

*     சுவையான பூண்டு ரசம் தயார்..

 


செய்து பார்த்து  உங்களின் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்..

29 comments:

ஹர்ஷினி அம்மா said...

ரசம் நல்லா இருக்கு அம்மு

மேலே இருக்கும் எஞ்சல் எல்லாம்?

Ammu Madhu said...

நன்றி ஹர்ஷினி அம்மா..ஏஞ்சல்ஸ் எல்லாம் சும்மா அலங்காரத்திற்காக வைத்திருந்தேன்:)))


அன்புடன்,

அம்மு.

Sangeetha Subhash said...

Hey ammu, I don't know to write tamil sorry about it, Thank for following visiting my block..Poondu soup looks amazing and very creative...I loved it....

Nandini said...

Rasam looks tempting! Even angels are attracted :)

Sanghi said...

Wow.. delicious! Lovely angel presentation!

Jaleela said...

வாவ் கேஸ்பிராப்ளம், உள்ளவர்களுக்கு, குழந்தை பெற்றவர்களுக்கு ஏற்ற பூண்டு ரசம் ரொமப அருமை.

நான் தினம் வைக்கும் எல்லா வகையான ரசத்திலும் பூண்டு கண்டிப்பா சேர்த்து கொள்வவோம்.

நட்புடன் ஜமால் said...

இப்படி எல்லாம் டிசைன் செஞ்சீங்கன்னா சாப்பிடவே தோனாதுங்க

பாவம் உங்க வீட்ல உள்ளவங்க

:)

Hema said...

All your presentations are so creative.. Good work.. The rasam looks delish!

சுசி said...

இது நல்லா இருக்கு அம்மு.. கட்டாயம் செஞ்சுடறேன்.

Ammu Madhu said...

நன்றி சங்கீதா..



அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி நந்தினி..கண்டிப்பா செய்து பாருங்க....



அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி சங்கி ..கண்டிப்பா செய்து பாருங்க....



அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி ஜலீலா அக்கா...நானும் மேக்சிமம் எல்லா ரசத்துலையும் பூண்டு சேர்த்து கொள்வேன்..



அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி ஜமால்..சாப்பாட்டை பாத்த வுடனே நல்ல இம்ப்ரஷன் வந்தா தான சாப்பிட தோணும்?....எல்லாரும் பூண்டு ரசம் செய்வாங்க ஆனா என்னோட பிரசண்டேஷன் தனியா தெரியனும்ல?அதுக்குதான் இப்படி:)))



அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி ஹேமா...


அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி சுசி.....


அன்புடன்,

அம்மு.

பாத்திமா ஜொஹ்ரா said...

ammu,really superb.I wanna try it.

Ammu Madhu said...

கண்டிப்பாக செய்து பாருங்க பாத்திமா..



அன்புடன்,

அம்மு.

my kitchen said...

Poondu rasam is good,Ur way of presentation is so creative.

Ammu Madhu said...

gita said



Rasam looks delicous Ammu, never tried adding lots of garlic in rasam, have to try out your rasam, love the angels :)

Ammu Madhu said...

நன்றி இசை..



அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி கீதா....



அன்புடன்,

அம்மு.

சிங்கக்குட்டி said...

அம்மு ஆனாலும் நீங்க இப்படி ஏமாத்த கூடாது?

நானும் படிச்சு படிச்சு பண்ணி பார்த்தேன், நல்ல சுவையுடன் புகைதான் வந்தது கடைசிவரை ஒரு ஏஞ்சலை கூட காணோம்?? :-))

Ammu Madhu said...

ஷப்பா........இப்பயே கண்ண கட்டுதே..


நன்றி சிங்கக்குட்டி..


அன்புடன்,

அம்மு.

Malar said...

wow..super rasam..rasam is my favorite :)
(www.malar-n.blogspot.com)

Valarmathi said...

Thanks for visiting my blog, you have a very nice blog.

Super rasam, i love rasam, nice presentation.

பாத்திமா ஜொஹ்ரா said...

அம்மு,தேங்க்ஸ்பா,ரொம்ப நல்லா வந்தது.என் கணவர் ரொம்ப ரசிச்சு குடிச்சார்.உங்க மத்த ரேசிப்பிகைகளை எதிர்பார்த்து கொண்டுள்ள உங்கள் அன்பு நண்பி பாத்திமா,பாத்திமா,பாத்திமா

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

ரசிச்சுப் பார்த்தேன் அந்த ஏஞ்சல்ஸ் 'கலை'!! செம ஆர்ட்டிஸ்ட்டிக்!!

raghuraman said...

Dear Ammu Madam,

Thanks for the recipe. At the outset, it looks like a good combination of spices mentioned by you. I am going to try it today.

Thanks Madam,

Raghuraman from Bahrain
8th Jan 2010

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?