Thursday, October 1, 2009

சாம்பார்/குழம்பு பொடி



தேவையான பொருட்கள்:
=======================
தனியா - ஒரு கப்
கடலை பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
துவரம் பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - எட்டு(காரத்திற்கு தகுந்தார்ப்போல்)
மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பெருங்காயம் தூள்  - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து (தேவைப்பட்டால்)
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:
============

* ஒரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காயவைத்து பருப்பு வகைகளை முதலில் சேர்த்து சிவக்க வறுக்கவும்.

* பருப்புகள் நன்றாக வறுபட்டதும் மீதம் உள்ள பொருட்களை சேர்த்து வறுத்து ஆறவிடவும்.

* நன்றாக ஆறியதும் மிக்சியில் பொடி செய்து மேலும் ஒரு இரண்டு நிமிடம் வெளியில் வைத்து பின்பு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் இரண்டு  மாதம் வரை வாசனையுடன் இருக்கும்.

* மணக்கும் சாம்பார் பொடி தயார்..இதை பற்றிய உங்களின் கருத்துகளை மறக்காமல் சொல்லிட்டு போங்க..

 இந்த பொடியின் குறிப்பு ஒரு பிரபல உணவகத்திலிருந்து வாங்கியது..குழம்பு மிக சுவையுடன் வருகிறது..ஆகவே அனைவரும் ஒரு முறை இதே அளவில் பொருட்கள் சேர்த்து செய்து பாருங்கள்..

8 comments:

Sangeetha Subhash said...

sambar powder sounds great!!!Thank u for sharing ammu.Will try your version.

M.S.E.R.K. said...

இத ... இதத்தான் நாங்க எதிர்பார்க்கிறோம்! அந்தப் ஹோட்டல் நண்பரை அப்படியே அமுக்குக்ங்க ! வாரம் ஒரு ரிசிபி சொல்லச் சொல்லுங்க. உலக தமிழர் சமையல் விரும்பிகள், வாழ்த்துவார்கள்!

Priya said...

WOw manakurathu sambar podi..

kamalabhoopathy said...

sambar podi very useful thing in kitchen, will try yours

S.A. நவாஸுதீன் said...

செய்முறையும் அத நீங்க ப்ரெசண்ட் பண்ணின விதமும் சூப்பர்

Anonymous said...

hmm.. nice text..

Kanchana Radhakrishnan said...

ப்ரெசண்ட் பண்ணின விதம் சூப்பர்.

சந்திர வம்சம் said...

தங்களின் குறிப்பில் கீழ்கண்ட மாற்றம் செய்து பார்க்கவும்:--

எண்ணய், சீரகம் தவிர்க்கவும். கடுகு சிறிது சேர்க்கவும். மிளகாய் தனியாக திரித்துக் கொள்ளவும்.இந்த முறையில் பொடி மிக்க வாசனையாகவும், ஒருவருடத்திற்கு கெடாமலும் இருக்கும்.(சீரகம் ரசப்பொடிக்குத்தான்).நன்றி..

add-tamil



World United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?