Thursday, October 1, 2009

பேச்சுலர்ஸ் தக்காளி தொக்கு: தேவையான பொருட்கள்:
=========================

தக்காளி -மூன்று
பெருங்காய தூள் - ஒரு சிட்டிகை
 மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
இஞ்சி துருவல் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
===========

* முதலில் தக்காளி மற்றும் இஞ்சியை தண்ணீர் விடாமல் நன்றாக அரைத்து கொள்ளவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த கலவையை செய்து உப்பு மற்றும் பெருங்காயதூள் சேர்த்து நன்கு கிளறவும்.

*சிம்மில் வைத்து கிளறவும்.ஒரு நிமிடத்தில் மிளகாய் தூள் சேர்க்கவும்.

* நன்றாக எண்ணெய் கக்கி சுருண்டு வரும்  பொழுது இறக்கவும்.(ஐந்து ஆறு நிமிடங்கள் ஆகும்.)

* இதனை மிக எளிதில் தயாரித்து விட முடியுமானதால் இது பேச்சுலர்ஸ்சுக்கு ஒரு நல்ல குறிப்பு...இதனை பத்து நிமிடத்தில் தயாரித்து விடலாம்..அதிக பொருட்களும் தேவை இல்லை..உவை மிக நன்றாக இருக்கும்..கொஞ்சம் அதிகமாக செய்து பாட்டிலில் போட்டு வைத்தால் ஒரு வாரம் வரை சலித்து போகாமல் இருக்கும்..
இது இட்லி,தோசை,சப்பாத்தி,பூரி,மற்றும் கலவை சாதங்கள்ளுக்கு மிக நன்றாக இருக்கும்..கண்டிப்பா  செய்து பாருங்க..

இதை பற்றி நீங்க என்ன நினைக்கறீங்கன்னு மறக்காம சொல்லிட்டு போங்க..


38 comments:

ஹர்ஷினி அம்மா said...

நல்ல குறிப்பு அம்மு .... அவசரமா தேவைக்கு கூட நல்ல பயன்படும்.

Geetha Achal said...

நன்றாக இருக்கின்றது...

என்ன ஆச்சு..Decoration கானுமே...

எப்படி இருக்கின்றிங்க...ரொம்ப நாளே ப்ளாக் பக்கமே வரமுடியவில்லை...

Priya said...

Nalla kuripu Ammu, Bachelorsku matum than intha recipe'illa yennakum kuda use aagume:)

Malar said...

hey simple and easy chutney..instead of powder i use red chilli in that :)

Balakrishna Saraswathy said...

Anything prepared with tomatoes is my dd's favorite..looks so tangy

Mythreyi Dilip said...

Best recipe for bachelors and working women!

Padma said...

Thakkali thokku super :)

USHA said...

Hi Ammu.

Wonderful blog pa....i felt as if entering into our country especially into T.N/chennai...with good design and tamil words...

One uniqueness was your presentation with creativeness.
Hatsoff!!!!

kanchana Radhakrishnan said...

நானும் உங்கள் follower ஆகிவிட்டேன்.

S.A. நவாஸுதீன் said...

ஆகா ஆகா, ரொம்ப நன்றி சகோதரி

Nandini said...

Quick version of the thokku is really a time saving dish! Romba Nalla irukku!

Malar Gandhi said...

Ammu samaiyal supera panreenga, love it.

Thanks for stopping by at my 'Poems' blog. I hardly update it. As usual...food blog has become...part of my routine.

Sangeetha Subhash said...

Thakali thoku looks awesome nd very tempting!!!!Heyy collect your award dear.its waiting in my blog 4 U.

பாத்திமா ஜொஹ்ரா said...

அம்மு,நல்ல அருமையான தொக்கு,பாத்தவுடனேயே செஞ்சு பாத்துட்டேன்.கொஞ்சம் மேத்தி கீரை போட்டு செஞ்சு பார்த்தேன்,நன்னா இருந்தது.நன்றி

Jaleela said...

அம்மு ரொம்ப நல்ல இருக்கு தக்காளி இஞ்சி தொக்கு, நானும் போட்டுள்ளேன் தக்காளி இஞ்சி சட்னி

நீங்க கொடுத்த அவார்டு எந்த குறிப்பில் இருக்கு , அங்கு நிறைய இருக்கு அதில் எந்த அவார்டு கொடுத்தீங்கள் என்று தெரியல‌

பிறகு என் சமையல் பக்கம் வரவே இல்லை

Music Composer Vivek Narayan said...

நான் பேச்சுலர் கிடையாது. ஆனாலும் எனக்கு உபயோகமான டிப்ஸ். சமைச்சுப் பார்த்துட்டு சொல்றேன்.

பித்தனின் வாக்கு said...

ஆகா நல்லா இருக்கு ஆனா ஒரு சின்ன விசயம் விட்டுடிங்க, அது என்னன்னா, முதலில் தக்காளியை கொதிக்கும் வெந்னிரில் போட்டு சில நிமிடங்கள் போட்டு பின் தோலை உரிக்கனும்(என் தோலை இல்லிங்க). அதான் மத்தபடி தொக்கு சூப்பர்.

பித்தனின் வாக்கு said...

நான் புதுசா புளியம்பூ தொக்கு போட்டிருக்கேன் படித்துப் பார்க்கவும்.

Mrs.Menagasathia said...

சூப்பராயிருக்கு இந்தத் தொக்கு.அவசரத்திற்க்கு உதவும் அம்மு!!

டெகரேஷன் எங்க காணோம்?

Ammu Madhu said...

நன்றி ஹர்ஷினி அம்மா வருகைக்கும் கருத்திற்கும்..

Ammu Madhu said...

நன்றி கீதா அக்கா வருகைக்கும் கருத்திற்கும்..டெகரேஷன் செய்யும் அளவிற்கு உடல் நிலை ஒத்துழைக்கவில்லை:(..சரியான ஜுரம் ஒரு வாரமாக பொழுது போகாமல் பதிவு போட்டேன் அதான் டெகரேஷன் மிஸ்ஸிங்.

Ammu Madhu said...

ஆமா ப்ரியா..அனைவருக்கும் யூஸ் ஆகும்..எளிதில் செய்து விட முடிவதால் அப்படி சொன்னேன்..வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ப்ரியா...

Ammu Madhu said...

நன்றி மலர்..வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மலர் ..

Ammu Madhu said...

எனக்கும் தக்காளி பேவரைட் சரஸ்வதி..தக்காளி இல்லை என்றால் எனக்கு சமைக்க தெரியாது:(வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சரஸ்வதி ...

Ammu Madhu said...

ஆமாம் மைத்ரேயி..வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

Ammu Madhu said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பத்மா ..

Ammu Madhu said...

நன்றி உஷா..அடிக்கடி வாங்க..

Ammu Madhu said...

நன்றி காஞ்சனா:)

Ammu Madhu said...

நன்றி நவாஸ்..

Ammu Madhu said...

நன்றி மலர் ..

Ammu Madhu said...

நன்றி சங்கீதா..

Ammu Madhu said...

நன்றி பாத்திமா..ரொம்ப மகிழ்ச்சி..

Ammu Madhu said...

நன்றி ஜலீலா அக்கா..நான் சுத்த சைவம்..நீங்க கொஞ்ச நாளா அசைவ குறிப்பு கொடுக்கிறீர்கள் என்பதால் கமென்ட் எதுவும் போடவில்லை:)மற்றபடி உங்கள் ப்ளாகிற்கு அடிக்கடி வந்து கொண்டு தான் இருக்கிறேன்..

Ammu Madhu said...

நன்றி விவேக்..

Ammu Madhu said...

நன்றி பித்தன்..

Ammu Madhu said...

நன்றி மேனகா..கொஞ்சம் உடல் நிலை சரி இல்லை என்பதால் தான் டெகரேஷன் செய்யவில்லை..அடுத்த குறிப்பிலிருந்து டெகரேஷன் தொடரும் ..

Ammu Madhu said...

பித்தன் இந்த தொக்கிர்க்கு தோல் நீக்க கூடாது..தோலுடன் தான் செய்ய வேண்டும்..முதலில் தக்காளியை வேக வைத்து தோல் நீக்கினால் அதில் உள்ள சத்துக்களும் அந்த நீருடன் சென்று விடும்..இது தோல் நீக்காமல் செய்தால் தான் நானாகஇருக்கும்.

MALARVIZHI said...

NICE BLOG. THOKKU SUPER

add-tamilWorld United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?