Tuesday, October 6, 2009

ஸ்பைசி பொடேடோ கறி.தேவையான பொருட்கள்:
==========================

முக்கோணமாக நருக்கிய உருளை - ஒரு கப்
வர மிளகாய் -ஐந்து
பூண்டு - மூன்று
கடுகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
கருவேப்பிலை - ஒரு ஆர்க்
உப்பு - தேவையான அளவு
இஞ்சி துருவல் - இரண்டு டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
நல்லெண்ணெய் - தேவையான அளவு
பச்சை பட்டாணி - கால் கப்(விருப்பப்பட்டால்)
நெய் - கால் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - ஒரு சொட்டு

செய்முறை:
===========

* முதலில் வரமிளகாய்யை பூண்டு சேர்த்து சிறிது நீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.பேஸ்ட் கெட்டியாக இருக்கணும்.

* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,சீரகம் தாளித்து கறிவேப்பிலை சேர்த்து பொரியவிடவும்.

* இஞ்சி சேர்த்து வறுக்கவும்.

* அரைத்த விழுது உப்பு மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகு வரை நன்கு வதக்கவும்.

* பச்சை பட்டாணி ,நருக்கிய உருளை கிழங்கை சேர்த்து நன்றாக பிரட்டி அடுப்பு தணலை சிம்மில் வைக்கவும்.

* நன்றாக வெந்ததும் (மசியும் அளவு வேக வைக்க கூடாது)ஒரு சொட்டு எலுமிச்சை சாறு ஊற்றி கிளறி இறக்கவும்.கால் ஸ்பூன் நெய் சேர்க்கவும்.

* சுவையான ஸ்பைசி பொடேடோ கறி தயார்..

* இது எலுமிச்சை சாதம்,வைத்த குழம்பு சாதம்,மற்றும் எல்லா கட்டு சாதத்துடனும் நன்றாக இருக்கும்.

இதை பற்றி உங்களின் கருத்துக்களை மறக்காமல் சொல்லிட்டு போங்க..

உடல் நிலை காரணத்தால் டெகரேஷன் செய்வதற்கு கிராபிக்ஸ் உதவியை நாட வேண்டியதாயிற்று.. நன்றாக இல்லை என்றால் பொறுத்துக்கொள்ளுங்கள்:)

33 comments:

Mrs.Menagasathia said...

உருளைக் கறி சூப்பர் அம்மு!!

உடல்நலம் இப்போ பரவாயில்லையா?சரியானதும் செய்ங்க.

Padma said...

WOW !!! Such a lovely picture and love spicy curry and this looks yummy ...

Ammu Madhu said...

நன்றி மேனகா..உங்கள் அன்பான விசாரிப்பு குறித்து மிக்க மகிழ்ச்சி..இனிக்கி தான் அப்பாய்ன்மென்ட் கிடைச்சுருக்கு.. டாக்டர்ட்ட போணும்..ஒரு வாரமாக ஜுரம் விட்டு விட்டு வருகிறது..

Ammu Madhu said...

பாராட்டிற்கு நன்றி பத்மா ..கண்டிப்பாக செய்து பாருங்கள்..வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

Priya said...

rombu nalla erukku recipe

D.R.Ashok said...

நல்ல பசில இருக்கும்போது ஏன் அம்மு இப்படி வெறுப்பேத்றீங்க. ஒரு பார்சல் அனும்ச்சிடுங்க... உங்களுக்கு புண்ணியமா போயிடும்.. ஆனா சூடா இருக்கனும்

Sangeetha Subhash said...

wow..supera iruku ammu...YUMMY!

kittymatti said...

naakule jollu sottudhu..it is soooo perfect!

Malar said...

photo nalla illanu yaar sonnathu!!!
super...take care of u

Priya said...

Paathathume saapida thonuthu Ammu..take care of u Ammu..

Geetha Achal said...

சூப்பர்ப்..மிகவும் நன்றாக இருக்கின்றது.

இப்பொழுது எப்படி இருக்கின்றிங்க அம்மு...உடம்பினை பார்த்து கொள்ளுங்க...

பிரியமுடன்...வசந்த் said...

பொடேட்டோ மை ஃபேவரிட் சைட் டிஷ்

Nandini said...

Potato curry is slurpy and super!

Pavithra said...

Looks yummy ammu.. graphics is also good yah .. perfect.

Pavithra said...

How is ur health now.. take care.

Ammu Madhu said...

நன்றி ப்ரியா..


வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ..தொடர்ந்து வாங்க..


அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

அஷோக் பார்சல் அனுப்பியாச்சு..அடுப்பில் இருந்து அப்படியே எடுத்து ஹாட்பாக்ஸில் போட்டு அனுப்பி விட்டேன் ப்ளாகர் கொரியர்ரில்..பிக் அப் பண்ண தயாரா இருங்க..


வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ..தொடர்ந்து வாங்க..


அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி சங்கீதா..


வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ..தொடர்ந்து வாங்க..


அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி ப்ரீத்தி:)))..


வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ..தொடர்ந்து வாங்க..


அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

ரொம்ப நன்றி மலர்..


வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ..தொடர்ந்து வாங்க..


அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி ப்ரியா..I will take care..


வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ..தொடர்ந்து வாங்க..


அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி கீதா அக்கா..இன்று டாக்டரிடம் சென்று வந்தாச்சு...எதோ வாட்டர் இன்பிச்ஷன்னாம் ..இரண்டு நாட்களில் சரி ஆகிவிடும் என்று சொன்னார்கள்..


வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ..தொடர்ந்து வாங்க..


அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

பொடேடோ எனக்கும் பேவரைட் வசந்த்..


வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ..தொடர்ந்து வாங்க..


அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி நந்தினி..


வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ..தொடர்ந்து வாங்க..


அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

நன்றி பவி .....


வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ..தொடர்ந்து வாங்க..


அன்புடன்,

அம்மு.

Ammu Madhu said...

என்னை அன்போடு விசாரித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்..உங்கள் அனைவரின் விசாரிப்பும் என்னை சீக்கிரம் குணப்படுத்திவிடும்..:)))அன்புடன்,

அம்மு.

பித்தனின் வாக்கு said...

கொஞ்சம் எலுமிச்சை சாதமும் இதுவும் செய்து வையுங்கள் சகோதரி நான் சாப்பிட வருகின்றேன்.
மிகவும் நன்றாக உள்ளது, செய்முறை விளக்கம் அருமை. இந்த பதிவை நான் படிக்கும் போது தயிர் சாதமும் உருளைக் கிழங்கு மசாலா பெறியலும்தான் சாப்பிட்டுக் கொண்டே படித்தேன். நான் சாப்பிட்ட மசாலக்கும் உங்களுடைய டிஸ்க்கும் இரண்டு வித்தியாசங்கள், ஒன்று உருளைக் கிழங்கு சிறியதாக நறுக்கி இருந்தார்கள். 2 வெங்காயம் சேர்த்து இருந்தார்கள்.
வெங்காயம் சேர்த்தால் கொஞ்சம் கிரேவி மாதிரி வரும் அப்புறம் குவாண்டிட்டி அதிகமாகும். அப்புறம் உடல்னிலைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

நான் திருக்கோவில் தரிசன முறை என்னும் பதிவு இட்டுள்ளேன். படித்துப் பார்க்கவும். குறைகளை கூறவும்.

S.A. நவாஸுதீன் said...

Good & Spicy Recipe

Jaleela said...

அம்மு ஜுரம் சரியாகி விட்டதா?

ரொம்ப நல்ல இருக்கு ஸ்பைசி பொட்டோடோ.

அம்மு அசைவ குறிப்பில் சைவமும் இருக்கு, சிகப்பரிசி மாவு ரொட்டி

Rohini said...

Wow.. Never came across a blog in Tamil.. besh besh romba nanna iruku!! :)
nanum ungal blog-i-nai thodarnthu varugiren!
Keep rocking!

Valarmathi said...

Spicy potato curry supera irukku. Nice presentation.

Lalitha said...

padikum pothe ellam sapida aasai varuthu... hw s ur health??

நட்புடன் ஜமால் said...

உருளை அவ்வளவாக பிடிப்பதில்லை.

வாழக்காயில் எதுனா போடுங்கோ

-----------------

உடல் நிலை எப்படி இருக்கு இப்போ

add-tamilWorld United Bloggers

World United Bloggers

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator

counter

Whats Your Google PageRank? Whats Your Google PageRank?